வேப்ப மரத்தில் திரவம் வடியும் இயற்கையான நிகழ்வை கடவுள் சக்தி என்று புரளியை கிளப்பி பூஜை-புனஸ்காரம்!

மூடநம்பிக்கையை பரப்புவதா? - திருப்பூரில் வெடித்துக் கிளம்பிய கடும் எதிர்ப்பு

திருப்பூர், பிப். 20- வேப்ப மரத்தில் திரவம் வடியும் இயற்கையான நிகழ்வை கடவுள் சக்தி என்று மூடநம்பிக்கையை பரப்பும் விதமாக ஒரு சில மத அமைப் புகளின் தூண்டுதலால் வேப்பமரத் திற்கு மஞ்சள் பூசி,துணிகட்டி,மாலை அணிவித்து பார்ப்பனர்கள் உள் ளிட்ட அடிப்படை வாத விரும்பிகள் "மதச்சார்பின்மை" கோட்பாட்டை அவமதிக்கும் வகையில் திருப்பூரில் உள்ள அரசுக்கு சொந்தமான வளா கத்தில் பூஜை, புனஸ்காரம் மேற் கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலை யம் எதிரில் செயல்பட்டு வந்த காய்கறி சந்தை பொலிவுறு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் காலி செய் யப்பட்டு, பல்லடம் சாலையில் முன்பு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் செயல்பட்டு வந்த வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறைக்கு சொந்தமான ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது.

இந்த வளாகத்திலுள்ள பல்வேறு மரங்களில் ஒரு வேப்பமரத்தில் வெள்ளை நிறத்தில் திரவம் வடிந்து வருகிறது. தாவரங்களில் இயற்கையாக ஏற்படும் மாற்றங்களில் ஒன்றான இந்த நிகழ்வை கடவுள் சக்தியென்று கூறி கடந்த 1 வார காலமாக அரசுக்கு சொந்தமான  இந்த வளாகத்தில் "மதச்சார்பின்மை" கோட்பாட்டை அவமதிக்கும் விதமாகவும் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராகவும்  வேப்பமரத் திற்கு பூஜை நடைபெறுகிறது.அந்த மரத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்பு செய் யப்பட்டு கோவில் கட்டுவதற்கான ஏற்பாடுகளும் துவக்கம் பெற்றுள்ளது.

வேப்பமரத்தில் பால் போன்ற

திரவம் வடிவது இயற்கையானதே!

வேப்பமரத்தில் பால் போன்ற வெள்ளை திரவம் வடிவது குறித்து தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் மற் றும் வேளாண் கல்லூரி பேராசிரி யர்கள் ஆகியோரை "விடுதலை" சார் பாக தொடர்பு கொண்டு கருத்துக்கள் கேட்டபோது அவர்கள் தெரிவித்த தாவது;

இந்த வெள்ளை நிற சாறு வடிதல் 50 வயதிற்கு மேற்பட்ட வேப்ப மரத் தில் நிகழும். இந்த வடிதலுக்கு கார ணம் "அக்ரோபாக்டீரியம் டியுமமிபே சியன்ஸ்" என்று அழைக்கப்படும் ஒரு பாக்டீரியா ஆகும்.பாக்டீரியாவினால் ஏற்படும்  தொற்றினால் இதுபோன்ற வெள்ளை நிற சாறு வடிதல் ஏற்படு கிறது. வேப்ப மரம் தன்னுள் அதிகப் படியான நீரை சேமித்து வைத்துக் கொள்ளும். இதுபோன்ற பாக்டீரியா வினால் பாதிக்கப்படும் மரம் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் பொழுது இது போன்ற வெள்ளை நிற திரவத்தை வெளியேற்றும். மரத் தில்  வெடிப்பு ஏற்பட்டு அதன் வழி யாக இந்த வெள்ளை நிற திரவம் வெளியேறும், 50 வயதிற்கு மேற்பட்ட மரத்தில் இதுபோன்ற வடிதல் நிகழும், இது இயற்கையானது.என்று தெரிவித்துள்ளனர்.

நடவடிக்கையின்மையால் குவியும் எதிர்ப்புகள்

"மதச்சார்பின்மை" கோட்பாடு மற்றும் அரசுக்கு சொந்தமான இடங் களில் எந்த மத அடையாளங்களும் இருக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு,ஒவ்வொரு குடிமகனும் விஞ்ஞான ரீதியிலான கருத்துக்களை பொதுமக்களிடையே  பரப்பவேண் டும் என்ற இந்திய அரசியல் சட்டப் பிரிவு 51 (எச்) ஆகியவற்றிற்கு முர ணாக தொடர்ந்து வரும் இப்பிரச் சினை குறித்து தொடர்புடைய நிர் வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வருவது "மதச்சார்பின்மையாளர்கள்" மத்தி யில் போராட்ட உணர்வை உருவாக்கி யுள்ளது. சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்து வரு கிறது.

"மதச்சார்பின்மை" காக்க போராட்டம்

திருப்பூர் மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஆகியோரிடம் இந்த அத்துமீறல் குறித்து முதற்கட்டமாக புகார் அளிக்கப்படவுள்ளது.

அரசுக்கு சொந்தமான இடங் களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதாலும்,அரசு இடத்தில் மத அடிப்படை வாதங்கள் நிலைபெற அரசு அதிகாரிகளே ஒத்துழைப்பு நல்கி வருவது வாடிக்கையாகி வருவ தாலும் இதை முறியடித்து அரசுக்கு சொந்தமான இடங்களில் "மதச்சார் பின்மை" கோட்பாட்டை நிலைநிறுத் தும் வண்ணம் பெரியாரிய உணர் வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக திருப்பூரில் போராட்டங்களும் விரை வில் முன்னெடுக்கப்படவுள்ளது.

Comments