‘நீட்' தேர்வு குளறுபடிகள்!

விசாரிக்க புலனாய்வுக் குழு?

 சென்னை, பிப்.11 ‘நீட்' தேர்வு .எம்.ஆர். விடைத்தாள் முறைகேடு புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவை அமைக்கலாமா? என்று  சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது குறுக்கிட்ட தேசிய தேர்வு முகமை  அப்படி விசாரணை நடத்தினால் பெரும் பிரச் சினை உருவாகும் என்று கூறியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மருத்துவ நுழைவுத்தேர்வான, நீட் தேர்வு நடந்து முடிந்த பின் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தேசிய தேர்வு முகமை அதன் இணையதளத்தில் .எம்.ஆர். விடைத் தாள்களை வெளியிட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.  இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், தேசிய தேர்வு முகமை தளத்தில், அக்டோபர் 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 700 க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாக காட்டிய நிலையில், அக்டோபர் 17 ஆம் தேதி திடீரென தன் மதிப்பெண்களை 248 ஆக குறைத்து .எம்.ஆர். வெளியிடப் பட்டதாகக் கூறியிருந்தார். அதற்கான ஸ்கீரின் ஷாட்களையும் ஆதாரமாக  இணைந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன்பு மீண்டும் விசா ரணைக்கு வந்தது. அப்போது, மாணவர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ஒரு தனிப்பட்ட மாணவரால் இணையத்தின் மூலம் நீட் மதிப்பெண்ணை திரிக்க முடி யும் என வாதத்திற்காக கூறினால், எண் ணற்ற மாணவர்கள் இதை செய்திருக்க கூடும், தேசிய தேர்வு முகமையின் குளறு படியால் மாணவர் பலிகடா ஆக்கப்பட் டுள்ளார் என்று குற்றம் சாட்டியதுடன், இது நீட் தேர்வின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து சிபிஅய் விசாரணை நடத்த உத்தர விட வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி,  இந்த வழக்கில், சைபர் குற்றங்களை கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்ற சிபிஅய் அதிகாரிகள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வுப் பிரிவை அமைக்கலாமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த   தேசிய தேர்வு முகமை  சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் மாசிலாமணி, குற்றச்சாட்டு களில் அடிப்படை முகாந்திரம் இருந்தால் மட்டுமே சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிட முடியும் எனவும், இந்த வழக்கில் அப்படி ஏதும் முகாந்திரம் இல்லை என்றும், ரசாயன முறையில் தயாரிக்கப்பட்டுள்ள .எம்.ஆர். தாளில் திருத்தம் செய்யவோ, ஏற்கெனவே எழுதிவற்றை அழிக்கவோ முடியாதெனவும், சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட்டால் அது இந்த நிறுவனத்தின் மீதும், கட்ட மைப்பின் மீதும் தவறான பிம்பத்தை ஏற் படுத்தும் எனவும் தெரிவித்தார். இதை யடுத்து வழக்கின் விசாரணை  பிப்ரவரி 18 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Comments