இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பல்கலைக் கழகங்களுக்கு நிர்ப்பந்தம்

 சென்னை உயர்நீதிமன்றம் இடித்துரை

சென்னை, பிப்.16 நிதியுதவி அளிக்கும் படிப்புகளுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டை பின்பற் றும்படி தமிழக பல்கலைக்கழகங்கள் மறைமுகமாக நிர்ப்பந்திக்கப்படு கிறதா? என்று சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இடஒதுக்கீடு பிரச்சினையின் காரணமாக எம்.டெக்., பயோ டெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட் டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட மேற்படிப்புகளுக்கும் இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மாணவி சித்ரா உள்பட பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை, நீதிபதி பி.புகழேந்தி விசாரித்து வருகிறார். விசாரணையின்போது, அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த செயலுக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். சர்வ சாதாரணமாக 2 மேற்படிப்புகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது என்று கருத்தும் தெரிவித்து இருந்தார்.

உதவி செய்ய தயார்

இந்த நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி முன்பு நேற்று (15.2.2021) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அகில இந்திய தொழில் நுட்ப கல்வி கவுன்சில் (.அய்.சி.டி..) சார்பில் ஆஜரான மத்திய அரசின் மூத்த வழக்குரைஞர் ரபுமனோகர்,  “2 படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முடித்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். இருந்தாலும், இந்த படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க அனுமதி கேட்டு அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் அனுப்பி னால், அதன்படி மாணவர்கள் சேர்க்கைக்கு .அய்.சி.டி.., எல்லா உதவிகளையும் செய்யும். அதேநேரம், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 45 இடங்களுக்கு மட்டுமே மாணவர் களை சேர்க்க அனுமதி வழங்கப்படுமே தவிர, புதிதாக 9 இடங்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்பு இல்லைஎன்று வாதிட்டார்.

கல்வி உதவித்தொகை

மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “இந்த 2 படிப்பு களுக்கும் மத்திய அரசு முழு நிதி உதவியை வழங்குகிறது. இதுபோல மத்திய அரசின் நிதியுதவியை பெற்று நடத்தப்படும் படிப்புகளுக்கு மத்திய அரசின் இடஒதுக்கீட்டைத்தான் தமிழகத்தில் உள்ள சில பல்கலைக் கழகங்கள் பின்பற்றுகின்றன. ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் மாணவர்களை சேர்க்காமல் நிறுத்தி வைத்துள்ளதுஎன்று வாதிட்டார்.

இதற்கு மனுதாரர் தரப்பு வழக் குரைஞர் .சரவணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். “2 படிப்புகளுக்கும் ஆகும் செலவுகள், ஆசிரியர்களின் ஊதியம் ஆகியவற்றை பல்கலைக் கழகம் தான் வழங்குகிறது. மாண வர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலான கல்வி உதவித் தொகையை மட்டும்தான் மத்திய அரசு வழங்குகிறது. உதவித்தொகை வழங்குவதால், மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்ய முடியாதுஎன்றார்

மறைமுக நிர்ப்பந்தமா?

மத்திய அரசு தரப்பில் தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி பி.புகழேந்தி, “பல பல்கலைக்கழகங்கள் மாணவர்களின் நலன் கருதி புதிய படிப்புகளை உருவாக்கி வரும்போது, அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் 25 ஆண்டு களாக நடத்தி வந்த படிப்பை நிறுத்தி யுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.,) விதிகளில் மாநில இடஒதுக் கீட்டை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், மத்திய அர சின் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று பல்கலைக் கழகங்களை மத்திய அரசு மறை முகமாக நிர்ப்பந்தம் செய்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய அரசு வழக்குரை ஞர், அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று பதில் அளித்தார்.

குழப்பத்துக்கு காரணம்

இதையடுத்து நீதிபதி, “எந்த இடஒதுக்கீட்டை பின்பற்றுவது? என்று தமிழக அரசிற்கு அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் எழுதியது ஏன்? அனைத்து குழப்பங்களுக்கும் இதுதான் காரணம்என்று கருத்து கூறினார். பின்னர், “2 எம்.டெக். படிப்புகளுக்கும் மாணவர்களை சேர்க்க அனுமதி வேண்டும் என்று .அய்.சி.டி..க்கு, அண்ணா பல்கலைக்கழகம் உடனே கடிதம் எழுத வேண்டும். அந்த கடிதத்தின் அடிப்படையில், .அய்.சி.டி.., தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, இந்த 2 படிப்புகளுக்கும் மாணவர்களை சேர்க்கும் விவகாரத் தில் தெளிவான விளக்கத்துடன் மத்திய அரசு வரவேண்டும். இந்த வழக்கில் யு.ஜி.சி.யை எதிர் மனுதார ராக சேர்க்கிறேன். அதேநேரம் தற்போது நிறுத்தப்பட்ட 2 எம்.டெக்., படிப்புகள் மூலம் இதுவரை எத்தனை நிபுணர்கள் உருவாகியுள்ளனர்? என்பது குறித்து ஆய்வு செய்ய மனுதாரர் தரப்பு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்என்று கூறி, இன்று(16.2.2021) வழக்கை மீண்டும் விசாரிப்பதாக உத்தரவிட்டார்.

Comments