இல்லத் திறப்பு விழா

 

தலைமை ஆசிரியர் ஜெய்சங்கர்-லதா (..ஆசிரியரணி) இல்லத் திறப்பு விழா கொள்கை பரப்புரை விழாவாக விருத்தாசலத்தில் 7.2.2021 அன்று காலை 10 மணியளவில் மாவட்ட தலைவர் . இளங்கோவன் தலைமையில் .சீ.இளந்திரையன், வை.இளவரசன், .வெற்றிச்செல்வன் முன்னிலையில் நடைபெற்றது. .ஜெய்சங்கர் வரவேற்று பேசினார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரைசந்திரசேகரன் இல்லத்தை திறந்து வைத்து வாழ்வியல் உரை வழங்கினார். மா.ரவிச்சந்திரன், .திருநாவுக்கரசு, சு.தண்டபாணி, அருள்சங்கு, பெரியார் செல்வம். சுப்பிரமணியன், பாலமுருகன், சிலம்பரசன், குமரேசன், ராம்ராஜ், காளமேகம், கொளஞ்சியப்பன், ஞானசேகரன், குணசேகரன் பேசினர். எழுத்தாளர் இமயம் சிறப்புரையாற்றினார். லதா நன்றி கூறினார். கொள்கை பிரச்சார விழாவாக நடைபெற்றது.

திராவிடர் கழக தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரனின் 64ஆவது பிறந்தநாள் மகிழ்வாக கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங். மாவட்டச் செயலாளர் . அருணகிரி, மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் செ. ஏகாம்பரம், குப்பு. வீரமணி ஆகியோர் அவரது இல்லத்திற்கு சென்று நரேந்திரன்-விஜயலெட்சுமி வாழ்விணையர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள் (12-02-2021).

காரைக்குடி அருகேயுள்ள கல்லூரில் சாக்கோட்டை ஒன்றிய தலைவர் சி.செல்வமணியின் கரிகாலன் பொறியியல் தொழில்நுட்ப நிறுவன திறப்பு விழாவில் சிவகங்கை மண்டல தலைவர் சாமி திராவிடமணி தலைமையில் அறந்தாங்கி கழக மாவட்ட தலைவர் கைகாட்டி மாரிமுத்து கழக கொடியினை ஏற்றிவைத்தார். காரைக்குடி மாவட்ட தலைவர் .அரங்கசாமி, மாவட்ட செயலாளர் கு.வைகறை, கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, காரைக்குடி நகர தலைவர் .செகதீசன், செயலாளர் தி.கலைமணி, .. தோழர்கள் பாலகிருஷ்ணன், .சுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர். (12-02-2021)

Comments