மறைவு

14.2.2021 ஞாயிறு பகல் 1 மணிக்கு வி.பச்சைமுத்து மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இவர் பல போராட்டங்களில் சிறை சென்றவர். கரகத்திக்கோட்டையில் தந்தை பெரியாரை அழைத்து பொதுக் கூட்டம் நடத்தியவர். அறந்தை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத் தலைவராக செயல்பட்டவர். 15.2.2021 அன்று எந்தவிதமான சடங்குகளுமின்றி உடல் அடக்கம் செய்யப்பட்டது. புதுக் கோட்டை மண்டலத் தலைவர் பெ.இராவணன், அறந்தை ஒன்றியச் செயலாளர் குழ.சந்திரகுமார் மற்றும் கழகத் தோழர்கள் அவர் இல்லம் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.

Comments