வெறும் சடங்கே!
தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயாவில் தமிழைக் கட்டாயமாக்க பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம்.
கடிதம் எழுதுவது எல்லாம் வெறும் சடங்குதான். அதையும் தாண்டி அ.தி.மு.க. ஆட்சி என்ன செய்யப் போகிறது என்பதுதான் முக்கியம்!
ஓ, அந்த சோடா பாட்டில் ஆசாமியா?
கால்நடைகளைக் கொண்டு சென்றால் பசு பாதுகாப்புப் படை தடுக்கும்: - மன்னார்குடி ஜீயர் அறிவிப்பு
ஓ, அந்த சோடா பாட்டில் வீச்சுப் புகழ் ஆசாமிதானே - அவரே கழியை எடுத்து வந்து சண்(¬)ட மாருதம் செய்தாலும் செய்வார் அடியா(ர்)ட்களாயிற்றே!
கேடு விளக்கெண் ணெய்க்குத்தான்!
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக மூன்று முறை தமிழகம் வர பிரதமர் முடிவு.
30 முறைதான் வரட்டுமே, விளக்கெண்ணெய்க்குத் தான் கேடு - பிள்ளை பிழைக்காதே!
அறை போட்டு யோசிப்பார்களோ!
எம்.பி., சீட் வாங்கித் தருவதாகக் கோடிக் கணக்கில் மோசடி - கருநாடகக் கும்பலுக்கு வலை வீச்சு!
கலர் கலராக மோசடி செய்வது எப்படி என்று அய்ந்து ஸ்டார் விடுதியில் அறை போட்டு யோசிப்பார்களோ!
பெரியாரும் - அண்ணாவும்!
கிருபானந்தவாரியார் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் : - முதலமைச்சர் அறிவிப்பு.
நாத்திகம் பேசிய அண்ணாதுரை புற்றுநோயால் செத்தார் என்று சொன்னதற்காக அண்ணா தி.மு.க. அரசின் ‘நன்றிக்' கடனோ!.
கற்பனைக்கு
மேலே மற்றொரு கற்பனையா?
ராமன் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்கக் கூடாது - உச்சநீதிமன்றத்தில் மனு.
ராமனே கற்பனை - இதில் ராமன் பாலம் வேறா?.
ஒழுக்கம் வளர...
வக்கீல் சங்கத் தேர்தலில் ஜாதி, மதம், அரசியல், பணம், மது முக்கியப் பங்கு வகிக்கிறது : - உயர்நீதிமன்றம் வேதனை.
‘‘நாட்டில் ஒழுக்கம் வளரவேண்டுமானால் வக்கீல் முறை ஒழிய வேண்டும்!'' - தந்தை பெரியார்
சீசரின் மனைவி
‘நீட்' தேர்வில் விடைத்தாள் முறைகேடு நடந்துள்ளதா என்று விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கலாமா? - மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தாக்கீது.
சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பால் இருக்க வேண்டும்.