ஒசூரில் அரசு பள்ளியின் சுவரில் தந்தை பெரியார், அம்பேத்கர் ஓவியங்கள்-கழகத்தின் சார்பில் பாராட்டு

ஒசூர் அரசு ஆர்.வி.ஆண்கள் உயநிலைப் பள்ளி சுற்றுப்புற சுவரில் நாட்டுக்கு உழைத்த தலைவர்கள் படங்களை குறிப்பாக தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் படங்களை வரைய வேண்டும் என்று பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒசூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் இராமச்சந்திரன், தொண்டர் அணி சூரியவளவன், நகர துணைச் செயலாளர் மு.ராஜகோபால் மற்றும் தோழர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சுற்றுப்புறச் சுவரில் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் படங்கள் வரையப்பட்டது. மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

Comments