பகுத்தறிவு உள்ளவர்களா நீங்கள்?

என்றும் இளமையாக இருப்பீர்கள்!

குழந்தைப் பருவத்தில் இருந்து  பகுத்தறி வோடு சுயக் கட்டுப்பாட்டோடு வளர்க்கப் பட்டால் நோயற்ற வாழ்வோடு இளமை யான தோற்றத்துடன் நீண்டகாலம் இருக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 'நேச்சுரல் சயின்ஸ்' இதழான  'போஸ்டிங்'கில் வெளி யிடப்பட்ட ஆய்வு முடிவு  ஒன்றில்  சிந்த னைத் திறன் மற்றும் கேள்வி கேட்கும் பழக்கம் கொண்ட  குழந்தைகள் நன்கு வளர்ந்த நோயற்ற வாழ்க்கை மற்றும் வளரும் போதும் இளமையான  தோற்றம் கொண் டவர்களாக உள்ளனர். அவர்களின் உடல் களும் மூளையும்  மற்றும் உயிரியல் ரீதியாக அவர்களை ஒத்த வயதுடையவர் களைவிட இளமையாகவும் அதிகம் சிந்திக்கும் திறனுடையதாகவும்  உள்ளது.

பெரிய நாடுகளில் மக்கள் தொகை அதிகமாகி வருகிறது மேலும் வயதானவர் கள் நோயுடன் நீண்ட காலம் வாழ்கின்றனர் என்று மிச்சிகன் பல்கலைக்கழக  பேராசிரி யர்  ரீமாசென் டைரக்ட் கருத்து தெரிவித்து உள்ளார்.

 இதற்குத் தீர்வு காண  உலகில் அதிகம் இளமையான தோற்றம் கொண்ட நாடு களில்  வாழும் மக்கள் குறித்த ஆய்வு ஒன்றை நடத்த முன்வந்தனர்.  அதில் ஒன்று நியூசிலாந்து.

நியூசிலாந்தில் 45 வயது வரை வாழ் பவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் குழந்தைப்பருவம், அவர்களின் சமூக தொடர்புகள் குறித்துத் தொடர்ந்து  ஆய்வு செய்தனர்.

 அதில் கிடைத்த முடிவுகள்  தொடர்பான விவரங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த் துக் கிடைத்த முடிவுகள் வியப்பை ஏற் படுத்தி உள்ளது.

 மூளை மற்றும் உடலில் பிற உறுப்புகள் அவர்களின் வயதுடைய பிற நபர்களை விட இளமையாக உள்ளதைக் கண்டறிந் தனர். மேலும் அவர்கள் எந்த ஒரு நோய்க்கும் ஆட்படாமல் ஆரோக்கியமாக இருந்ததையும் கண்டறிந்தனர். இவர்களின் வாழ்க்கை முறையில்  அனைவரும் பகுத் தறிவுடனும் சுயக் கட்டுப்பாட்டுடனும் இருந்தது தெரியவந்துள்ளது.

 பிறருக்கு உதவி செய்வது, அவர்களின் கவலையைக் கவனித்துக்கொண்டு அவர் களுக்கு ஆறுதல் கூறுவது, இயன்ற உதவி களைச் செய்ய முன்வருவது ஆலோசனை களைக் கொடுப்பது, போன்ற நற்செயல் களோடு தீயப் பழக்கங்களான புகைப் பிடித்தல், தவறாகப் பேசுதல், பொறாமைப் படுதல் போன்றவற்றைக்  தவிர்த்து உடற் பயிற்சி மேற்கொள்வது. பிறரின் தவறான பேச்சுக்களை எளிதில் கடந்து செல்வது போன்றவற்றைத் தொடர்ந்து செய்கின்ற னர். இந்த ஆய்வுகளின் முடிவில்  பகுத் தறிவோடு சுயகட்டுப்பாட்டுடன் வாழ்ப வர்கள் வாழ்க்கை நோயற்ற மற்றும் என்றும் இளமையான மனதுடன் உள்ளதாகக் கண் டறிந்துள்ளனர்.

Comments