‘செஸ்' வரி போட்டு ஏமாற்றும் மோடி அரசு

விவசாயத்திற்கான நிதியில் ரூ.11 ஆயிரம் கோடி வெட்டு!

புதுடில்லி, பிப். 4- விவசாயிகளையும், கிராமங்களையும் தனது இதயத்தில் கொண் டிருப்பதாக மத்திய பட்ஜெட் அமைந் துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்தார்.

பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராம னும், தன் பங்கிற்கு விவசாயிகள் மீது ரொம்பவே அக்கறை இருப்பவர் போல, பட்ஜெட்டில் விவசாயத்திற்கான தனி செஸ் வரியெல்லாம் விதித்து பொதுமக்களை மிரட்டி னார். ஆனால், 2020-21 நிதியாண்டைக் காட்டிலும், 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடு சுமார் 11 ஆயிரம் கோடி வரை வெட்டப்பட்டுள்ளது.

அதாவது, நடப்பு 2020-21 நிதியாண்டில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 762 கோடியே 35 லட்சம் ரூபாய் விவ சாயத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், வேளாண் அமைச்சகத்தின் கீழ் வேளாண்மை, ஒத்துழைப்பு மற்றும் விவசாய நலன் மற்றும் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை ஆகிய இரு துறைகளுக்கும் மொத்தமே ரூ.ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 531 கோடியே 19 லட்சம் ரூபாய்தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் குறைவானது ஆகும்.

வேளாண்மை, ஒத்துழைப்பு மற்றும் விவசாய நலத் துறைக்கான பட்ஜெட் மதிப்பீட்டில், 2020-21 இல் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 399 கோடியே 77 லட்சம் ஒதுக்கீடு செய்தி ருந்த நிலையில், 2021-22 பட்ஜெட் மதிப்பீட்டில், அது ஒரு லட்சத்து 23 ஆயி ரத்து 17 கோடியே 57 லட்சம் ரூபாய் என்று சுமார் ரூ. 11 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டுள்ளது.

வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறைக்கு 2020-21 பட்ஜெட்டில் ரூ. 8 ஆயிரத்து 362 கோடியே 58 லட்சம் செலவிட மதிப்பிட்டிருந்தது.

அதைக்காட்டிலும் 2021-22 பட்ஜெட்டில் சுமார் 150 கோடி ரூபாய் அளவிற்கே தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ. 8 ஆயிரத்து 513 கோடியே 62 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.

இவ்வாறு நிதியை வெட்டிச் சுருக்கி விட்டுத்தான், பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக மோடி அரசு விவசாயிகளையும் பொதுமக்களையும் ஏமாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.

அதற்காக மோசடியான ஒரு கணக்கையும் அது காட்டியுள்ளது.

அது என்னவென்றால், கடந்த பட்ஜெட்டில், பல்வேறு வேளாண் திட்டங்களுக்கு மட்டும் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 399 கோடியே 77 லட்சத்தை மோடி அரசு பட்ஜெட் மதிப்பீ டாக (Budjet Estimates) அளித்திருந்தது. இருப்பினும் செலவு (திருத்தப்பட்ட மதிப்பீடு - Revised Estimates) என்று பார்த்தால் வெறும் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 757 கோடியே 92 லட்சம் ரூபாய் தான்.

2020-21 நிதிநிலை அறிக்கையில் பிரதமர் கிசான் சம்மான் திட்டத்திற்கு 75 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய் யப்பட்டிருந்தது. விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கு வதே இந்த திட்டமாகும். ஆனால், இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 65 ஆயி ரம் கோடி ரூபாயைத்தான் மோடி அரசு செலவிட்டது.

இதனால் மொத்தமாக ரூ. ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 399 கோடிக்கு திட்டமிட்டாலும், மேற்கொள்ளப்பட்ட செலவு ரூ. ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 757 கோடியே 92 லட்சம்தான்.

இதைக்குறிப்பிட்டு, 2020-21 இல் செலவிட்ட தொகையைவிட 2021-22 பட்ஜெட்டில் அதைவிட அதிகமாக ரூ.ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 520 கோடியே 30 லட்சம் ஒதுக்கீடு செய்து சாதனை படைத்து விட்டதாக துள்ளிக் குதிக்கிறது.

வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறைக்கு 150 கோடி ரூபாய் அதிகரிப்புடன் ரூ.8 ஆயிரத்து 513 கோடியே 62 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தனியாகும்.

இந்த இரண்டையும் சேர்த்துத் தான் 2021-22 பட்ஜெட்டில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 531 கோடியே 19 லட்சம் ரூபாயை மோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது 2020-21 நிதியாண்டின் லட்சத்து 42 ஆயிரத்து 762 கோடியே 35 லட்சம் ரூபாயை விட 11 ஆயிரம் கோடி குறைவு என்பதை வசதியாக மறைக்கிறது.

Comments