தமிழர் தேசிய முன்னணி தலைவரும், ஈழத்தமிழர் வாழ்வு ரிமைப் போராளியுமான அருமை நண்பர் பழ.நெடுமாறன் அவர்கள் உடல் நலம் குன்றி, சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம்.
அவர் முழு நலம் பெற்றுத் திரும்பி மீண்டும் வழக்கம் போல் தனது தொண்ட றத்தைத் தொடர வேண்டுமென விழைகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
13.2.2021