பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கால நிலை செயற்பாட்டாளர் திஷா ரவியை மத்திய அரசு கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்தார் என்பதற்காக 21 வயது நிரம்பிய பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கால நிலை செயற்பாட்டாளரான திஷா ரவியை மத்திய அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறை அல்லவா?
இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள கருத்துரிமை யின்படி அவ்வாறு கூறுவது எப்படி குற்றமாகும்? அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களாட்சியில்!
குற்றச்சாட்டுகள் புனையப்பட்டு அவர் கைது செய்யப் பட்டுள்ளார் என்பதை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் போன்றோர் தெளிவாகக் கூறி, தங்கள் அதிர்ச்சியைத் தெரிவித்துள் ளனர்.
இளைஞர்களின் கருத்துக் குரல்வளை இப்படி நெரிக்கப் படுவதன் நோக்கமே, விமர் சனம் வரக்கூடாது என்பதற்கான அச்சுறுத்தலே அல்லாமல், வேறு என்ன?
உடனடியாக அவரை விடு தலை செய்து, மக்களாட்சி என் பதை நிரூபியுங்கள் - அழி வழக்குகள் நியாயமல்ல!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
16.2.2021