ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     அருணாச்சல பிரதேசம், கரு நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடத்தியது போல் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி சட்ட மன்ற உறுப்பினர்களை பதவி விலகச் செய்து, ஆட்சியைக் கவிழ்த்துள்ளது மத்திய பாஜக அரசு. விரைவில் தேர்தலை நடத்திட வேண்டும் என தலையங்கச் செய்தி கூறுகிறது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     விவசாயிகளின் எதிர்ப்பு தொடர்பாக, சமூக ஊடகங்களில் "சர்ச்சைக்குரிய ஆவணத் தொகுப்பை" பகிர்ந்ததில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சமூக செயற்பாட்டாளர் திஷாவுக்கு டில்லி உயர் நீதிமன்றம் பிணை அளித்தது. குடிமக்கள் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் அரசாங்கத்தின் மனசாட்சியை எதிரொலிப்பவர்கள். அவர்கள் மாநிலக் கொள்கைகளுடன் உடன்படாததால் அவர்களை சிறையில் வைக்க முடியாது என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

·     மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பாரம்பரிய தலைப்பாகைகள் மற்றும் விவசாயிகள் இயக்கத்தின் பாடல்களை பாடினர். நாள் முழு வதும் நடந்த நிகழ்வு 1906 ஆம் ஆண்டின் "பக்தி சம்பல் லெகர்" ஆல் ஈர்க்கப்பட்டது.

·     உத்தரப்பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்தைச் சேர்ந்த அய்ந்து விவசாயிகள் தினமும் எட்டு மணி நேரம் பட்டினிப் போராட்டம் இருந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும், விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை உறுதி செய்திடவும் செய்திகளை அனுப்புவார்கள் என ராஷ்டிரிய கிஷான் மஜ்தூர் சங்கத்தின் தலைவர் வி.எம்.சிங் தெரிவித்துள்ளார்.

தி டெலிகிராப்:

·     அரசாங்கத்தின் தவறான கொள்கைகளை விமர்சிக்கும் சுதந்திரத்தை குடிமக்கள் இழந்துவிட்டதாகவும், இன்னும் தைரியமாக  பேசுபவர்கள் தேசத்துரோகக் குற்றச்சாட்டு மற்றும் சிறைவாசம் போன்ற பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்கொள்கிறார்கள் என்றும் சிவசேனா தனதுசாம்னாபத்திரிகையில் பாஜகவை சாடியுள்ளது.

·     பாரம்பரிய ஜாதி முறை மீதான கோல்வால்கரின் நம்பிக்கையில், பெண்களை தங்களின் இடத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற கருத்து மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் எதிரொலிக்கிறது. ஒற் றுமை, வெளிப்படையாக, ஜாதி பிரிவு மூலம் வருகிறது. கோல்வால்கர் எழுதியது அல்ல, ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்பது முக்கியமானது. தேசியவாதம் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு - அமைதி என்பது சீனாவின் விஷயத்தில் மட்டுமே உள்ளது - அமைதியான எதிர்ப்பாளர்கள் மற்றும் விமர்சகர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் தலை வர்கள் மற்றும் பகுத்தறிவுவாதம்  பேசுபவர்களுக்கு எதிராக வன்முறையை ஊக்குவித்துள்ளது. ஒரு தனிநபர் கோல்வால்கரின் பங்களிப்புகளை நாட்டிற்கு நினைவுபடுத்த இது சரியான தருணம் என்று பாஜக தலைமையிலான அரசாங்கம் உணர்ந்ததில் ஆச்சரியமில்லை என கோல்வால்கர் பிறந்த நாளில் மத்திய கலாச்சார அமைச்சகம் தெரிவித்த வாழ்த்துச் செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து தலையங்கம் எழுதப் பட்டுள்ளது.

- குடந்தை கருணா

24.2.2021

Comments