புதுடில்லி, பிப். 13- ஜாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே சமூக பதற்றங்களைத் தணிக்கும் வழி என வழக்கு விவாதம் ஒன்றில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையொட்டி அவர்கள் இருவரும் தங்களை குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து பாதுகாக்கக் கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்றத்தை நாடினார்கள். இந்த வழக்கு மனுவை நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ஹ்ரிதிகேஷ் ராய் ஆகியாரின் அமர்வு விசாரணை செய்தது.
இந்த விசாரணையில் உச்சநீதிமன்றம், “நீதிமன்றங்கள் சமுதாய விதிமுறைக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்யும் இளைஞர்களுக்குப் பெருமளவில் உதவுகின்றன. இளைஞர்கள் ஜாதி மறுப்பு திருமணத் தின் மூலம் இந்தியாவில் ஜாதி வேறுபாடு மற்றும் சமூக பதற்றங்களைப் பெருமளவில் குறைந்து வருகின்றார்கள். இதன் மூலம் சமூக பதற்றங்களைத் தணிக்க ஜாதி மறுப்பு திருமணங்கள் வழி வகைகள் செய்கின்றன.
ஜாதி மறுப்பு திருமணங்கள் மட்டுமே ஜாதியை நிர்மூலமாக்க கூடிய ஒரே தீர்வு ஆகும். இவ்வாறு இணைவதன் மூலமே உறவினர் மற்றும் உறவு உணர்வை உருவாக்க முடியும். இவ்வாறு திருமணம் செய்து கொள்ளும் இளைய தலைமுறையினர் பெரியோரிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் போது உதவிக்கு நீதிமன்றங் கள் உள்ளன. வயது வந்த ஆண் பெண் திருமணம் செய்ய குடும்பம், சமூகம் அல்லது குலத்தின் ஒப்புதல் தேவை இல்லை“ எனத் தெரிவித்துள்ளது.
காரணமின்றி ரத்து செய்யப்பட்ட
நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர்
புதுடில்லி. பிப். 13- நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (13.2.2021) முதல் மாநிலங்களவை அமர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநிலங் களவை செயலகம் அறிவித்து உள்ளது.
நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடார் ஜனவரி 29-ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ‘2021-22ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வாசித்தார். தொடர்ந்து, கரோனா அச்சுறுத் தல் காரணமாக, மாநிலங்களவை முற்பகலிலும், மக்களவை பிற் பகலிலும், நடைபெற்று வந்தன. தற்போது, குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற அவைகளில் விவாதம் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இன்று முதல் மாநிலங்களவை அமர்வு ரத்து செய்யப்படுவதாகஅறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 15ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டிருப்பினும்,
அவை இன்று பிப்ரவரி 13ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில், இன்று (பிப். 13) மாநிலங்களவையின் அமர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர் களும் ஆளும் பாஜக அரசின் மோசடிகளை தொடர்ந்து எடுத்து வைத்து வருகின்றனர், திமுக விசிக உள்ளிட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் டெரிக் ஓ பிரையன், மஹூவா மய்த்ரே போன்ற திரிணாமுல் கட்சி உறுப்பினர்கள் மற்றும் சிவசேனா உறுப் பினர்கள் தொடர்ந்து தங்களின் எதிர்ப்புக்குரலை எழுப்பியுள்ளனர். விவசாயிகள் போராட்டம் நடந்துவரும் வேளையில் இவர்களது பேச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது, இதனால் பயந்து போய் நாடளுமன்றத்தை முன்கூட்டியே முடித்துவிட்டார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்
புதுடில்லி, பிப். 13- முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 130 ஆக குறைக்கும்படி கேரளாவை சேர்ந்த ரசூல் ராய் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசுபதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உமாபதி தாக்கல் செய்த பதில் மனுவில், ‘2018இல் கேரளாவில் ஏற் பட்ட வெள்ள பாதிப்பிற்கு தமிழக அரசும் ஒரு காரணம் என அம்மாநில அரசு கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை. அதனால், தமிழக அரசின் மீது பழிபோடும், உண்மைக்கு புறம்பான இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என கூறியிருந்தார்.
இதை நேற்று (12.1.2021) விசாரித்த பிறகு நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட் டத்தை குறைக்க உத்தரவிட முடியாது. அதில், எந்தவித முகாந்திரமும் இல்லை,’ என தெரிவித்துள்ளது.