தொழிலாளர்கள் சிகிச்சை பெற மருத்துவமனைகளின் பட்டியல் வெளியீடு

புதுடில்லி, பிப். 20- பயனாளி களின் வீடுகளுக்கு அருகில் ஈஎஸ்அய் மருத்துவமனை இல்லையென்றால் பட்டியலில் இடம்பெற்றுள்ள இதர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ள லாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தொழி லாளர்- வேலைவாய்ப்பு அமைச் சகம் தெரிவித்துள்ளதாவது:

பணியாளர் அரசு காப் பீட்டு திட்டம் (ஈஎஸ்அய்சி) புதிய பகுதிகளுக்கு நீட்டிக் கப்பட்டதற்கு பின் பயனா ளிகளின் எண்ணிக்கை கணிச மாக உயர்ந்துள்ளதை கருத் தில் கொண்டு உறுப்பினர் களின் வீடுகளுக்கு அருகி லேயே ஈஎஸ்அய் மருத்துவ சேவை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான தொடர் முயற்சிகள் எடுக்கப் பட்டு வருகின்றன. ஈஎஸ்அய் மருத்துவமனை, சிகிச்சை மய்யம் அல்லது காப்பீட்டு மருத்துவர், பயனாளியின் இல்லத்துக்கு 10 கிலோமீட்டர் தொலைவில் இல்லாத பட்சத் தில், பட்டியலில் இடம்பெற் றிருக்கும் அருகிலுள்ள மருத் துவமனைகளில் (நாடு முழுவ தும்) சிகிச்சை பெறலாம். இதற்கு ஈஎஸ்அய் மருத்துவ மனையின் பரிந்துரை தேவையில்லை. பரிசோதனை அல் லது மருத்துவமனையில் அனு மதிக்க வேண்டிய தேவை இருப் பின், பயனாளிக்கு காசில்லா சிகிச்சை வழங்குவதற்காக 24 மணி நேரத்துக்குள் ஆன்லைன் முறையில் ஈஎஸ்அய்யின் ஒப்பு தலை பெற்றுக்கொள்ள லாம்.இது தொடர்பாக ஈஎஸ் அய்சி தலைமையகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் களை <ஷ்ஷ்ஷ்.மீsவீநீ.ஸீவீநீ.வீஸீ> என்னும் இணைய தளத்தில் பார்க்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments