திராவிடம் வெல்ல அவர் ஒளி பரவட்டும்!
'திராவிட
மொழி ஞாயிறு' என்ற சிறந்த பட்டத்தினை பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரிட மிருந்து சேலத்தில் பெற்ற
நுண் மாண் நுழைபுலம் மிக்க தேவ நேயப் பாவாணர் அவர்களது பிறந்த நாள் இன்று.
"தமிழ்
செம்மொழி மட்டுமல்ல; உலக மொழிகளில் மூத்த மொழியும், மிகப் பெரும் தொன்மையானது என்ற புகழுக்குரியதோடு, திராவிட மொழிகளுக்குத் தாயாகவும், ஆரிய சமஸ்கிருத மொழிக்கு மூலமாகவும்கூட அமைந்த மொழி" என்பதை தனது ஆய்வுகள் மூலம் உலகுக்குக் காட்டிய சிறந்த ஒப்பற்ற ஆய்வாளர்.
5.1.1981இல்
உடலால் மறைந்தாலும், தமிழ் திராவிட எழுச்சியால், ஒப்பற்ற தம் உயர்தன் ஆற்றலால் - ஆய்வால் என்றும் வரலாறாக வாழ்ந்து - வழிகாட்டும் இன உணர்வும், தன்மானமும்
பீறிட்டுக் கிளம்பும் வற்றாத ஊற்றாகத் திகழ்ந்தவர் பாவாணர்!
"பாவாணர்
வாழ்க!" என முழங்கி திராவிடத்தின்
பகையை வெல்லுவோம்!
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
7.2.2021