இளமையாக வாழ அதிக தேநீர் அருந்த வேண்டும்

அண்மைக் காலங்களில் நோய் எதிர்ப் புச் சக்தி குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது, அதற்கு முக்கியத்துவம் கொடுக் கப்படுகிறது. முக்கியமாக, முதியோர்களின் உடல்நலம் குறித்து அதிக விவாதம் நடந்து கொண்டு வருகிறது.

முதியவர்களுக்குச் சக்தி 

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கத் தேவையான உணவு முறைகள் குறித்து விவாதங்கள் ஆய்வுகள் உலகெங்கும் நடத்தப் பட்டு வருகிறது.  இந்த ஆய்வின் மூலம் தேநீர் அருந்துபவர்களிடம் அதிக நோய் எதிர்ப்புச் சக்தியைக் கண்டறிந்துள் ளனர். 'தி நேஷனல்' என்ற அறிவியல் ஊட கத்தில்   வெளிவந்துள்ள ஆய்வறிக்கையின் படி ஒரு நாளைக்கு 5 கோப்பைக்கு மேல் தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ள 85 வயதிற்கு மேற்பட்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதையும் அவர் களின் உடல் நலம் ஆரோக்கியமாக இருப் பதையும் கண்டறிந்துள்ளனர்.  இந்த நோய் எதிர்ப்புச் சக்தியின் மூலம் முதியவர்களின் அன்றாட வாழ்க்கைமுறை மாற்றப்பட்டு வருகிறது.  நியூகாஸ்லே  பல்கலைக்கழக  உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்த கல்வி யியல் துறைப் பேராசிரியர் எட்வெர்ட் ஓக் கிலே தலைமையில்  தேநீர் அருந்துபவர் கள் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டது, 

 முக்கியமாக  வயதானவர்களின் மீது நடத்தப்பட்ட ஆய்வின்போது தேநீர் அதி கம் அருந்தியவர்களுக்கு தேநீரில் உள்ள சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் மூலம் அவர்களின் உடல் நோயெதிர்ப்பு சக்தி யைப் பெறுவது கண்டறியப்பட்டுள்ளது. ஆய் வில் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட அனைவருமே  தேநீர் அருந்து வதை வழக் கமாகக் கொண்டுள்ளனர்.

இவர்கள்  நண்பர்களுடன் சந்திக்கும் போதும் மற்றும் விழாக்களுக்குச் செல்லும் போதும் தேநீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

 இவ்வாறு தேநீர் அருந்துபவர்களில் நியூ கோர்ஸில் மற்றும் நார்த் டைம் சைடு  பகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட  முதியவர் களிடம்  ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின் போது சுமார் 200க்கும் மேற்பட்டவர்களது வீட்டிற்கும் செவிலியர்கள் மற்றும் தொண்டு அமைப் பினர் கொண்ட குழு  அவர்களின் தினசரி வாழ்க்கை முறை குறித்த செயல்பாடுகளைக் குறிப்பிட்டு கேள்வித்தாள்களை அவர்கள் முன்வைத்து அவர்கள் சொல்லும் பதில்களைப் பதிவு செய்து வந்தனர்.

 மேலும் அவ்வப்போது அவர்களின் இரத்தமாதிரிகளைப் பரிசோதனை செய் தனர். இதன்படி கருப்பு தேநீர் குடிப்பது நினைவாற்றல் மற்றும் முதுமையில் வரும் சில நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. 

 இந்த ஆய்வு முடிவின்படி தேநீர் குடிப்பது சிறப்பான ஒரு செயலாகக் கரு தப்படுகிறது.  சிக்கலான பணிகளை மிகவும் திறமையுடன் கையாளும் திறமையை தேநீர்  நமக்குத் தருகிறது. மேலும் நினை வாற்றலும் அதிகரிக்கும் அதே நேரத்தில்  நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கிறது.  இந்த இரண்டிற்கும் உள்ள தொடர்பு   மற்ற சூடான பானங்களிற்கு கிடையாது என்பது தெரியவந்துள்ளது.

முக்கியமாகத் தேநீரில் உள்ள சைக்கோ மேட்டர் என்ற நொதிக்க  வைக்கும் ஆற்றல் என்ற நொதி வேகத்தைச் சிந்தனைத் திறனை அதிகப்படுத்தி அவர்களின் செய ல்பாடுகளைத் துரிதப் படுத்துகிறது. 'பிளாக் டீ' எனப்படும் கருப்புத் தேநீர் குடிப்பது உடல் நலத்தை ஆரோக்கியத்தோடு வைக் கும். அதே நேரத்தில் அவர்களது சிந்த னைத் திறனையும் அதிகரிக்கும் என்று இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Comments