மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வை அனுமதிக்க மாட்டேன் : மம்தா எச்சரிக்கை

கோல்கத்தா, பிப். 11  தன்னை வீழ்த்துவதற்கு, தான் தனி ஆளில்லை எனவும், தனக்கு மக்கள் ஆதரவு இருப்பதாகவும் ஆவேசமாக பேசியுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா.

பாரதீய ஜனதாவிற்கு ஆட்சி அதி காரத்தை அளிப்பது, கலவரத்தை ஊக்கப் படுத்துவதாக அமையும். நீங்கள் கலவரம் வேண்டும் என விரும்பினால் பாரதீய ஜன தாவிற்கு ஓட்டளியுங்கள். இந்த மம்தாவை வீழ்த்த அவர் தனி ஆள் இல்லை; அவருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது. நான் உயிருடன் இருக்கும் வரையில் மேற்கு வங்கத்தில் பாஜகவை அனுமதிக்க மாட் டேன்என்று பேசினார் மம்தா.

மேலும், புருத்வான் நகரில் நடந்த பொதுக்கூட் டத்தில் மம்தா  பேசுகையில், “பாஜகவுக்கு இந்தத் தேர்தலில் வெளியே செல்வதற்கான கதவுகளை மக்கள் திறந்து விடுவார்கள் என்று நம்புகிறேன். இந்திய தேசத்தைச் சுடுகாடாக பாஜக அரசு மாற்றிவிட்டது.

மேற்கு வங்கத்தையும் அதே போன்று மாற்ற முயல்கிறார்கள். நான் அதை அனுமதிக்க மாட்டேன்என்று அவர் கூறினார்.

Comments