காணொலியில் 'திராவிடப் பொழில்' ஆய்விதழ் ஆய்வரங்கம்

தஞ்சை, பிப். 17- 'திராவிடப் பொழில்' ஆய் விதழ் ஆய்வரங்கம் காணொலி வாயிலாக, இந்திய நேரப்படி பிப்ரவரி 14ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது.

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்பப் பல்கலைக்கழக (நிகர் நிலைப் பல் கலைக் கழகம்) பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பாக, பெரு முயற்சியுடன், திராவிடப் பொழில் இதழ் 16.01.2021 அன்று வெளியிடப்பட்டது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, காலாண்டு இதழாக தைத்திங்களில், தமிழ்ப் புத்தாண் டின் தொடக்கத்தில் வெளிவந்துள்ள 'திரா விடப் பொழில்' இதழ் கல்வியா ளர்கள் பல ரின் பாராட்டைப் பெற்று வருகிறது.

திராவிடப் பொழிலின் முதல் இதழில் வேந்தர் கி.வீரமணி, சிகாகோ பல்கலைக் கழகப் பேராசிரியர் சா.ஷா. எபிலிங்க், முன்னாள் துணைவேந்தர்கள்  அவ்வை நடராசன், வேதகிரி சண்முகசுந்தரம் மற்றும் முனைவர் மறைமலை இலக்குவனார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப் பித்துள்ளனர் .

'திராவிடப் பொழில்' முதல் இதழில் மூன்று தமிழில், மூன்று ஆங்கிலத்தில் என ஆறு கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முனைவர்கள் கண்ணபிரான் ரவிசங்கர், மாத்வி பொட்லூரி, .காளிமுத்து, வா.நேரு, இரா.அறவேந்தன் மற்றும் முன்னாள் துணைவேந்தர் பி.செகதீசன் ஆகியோர் கட்டுரைகள் எழுதியுள்ளனர். திராவிடப் பொழில் முதல் இதழ்  பற்றிய ஆய்வரங் கத்தினை பெரியார் பன்னாட்டு மய்யம், திணை-அமெரிக்கா, கலாட்டா நெட்டிசன் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர் நிலைப்பல்கலைக் கழகம்) இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். ஜூம் இணைய இணைப்பு வழியாக நடைபெற்ற இந்த ஆய்வரங்கம் பேஸ்புக், யூ டியூப் வழியாக நேரடியாக ஒளி பரப்பப்பட்டது.

திணை-அமெரிக்கா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.பாலா அறிமுக வுரை நிகழ்த்தினார். மக்களையும் கல்வி யாளர்களையும் ஒருங்கிணைக்கும் இந்தத் திராவிடப்பொழில் ஆராய்ச்சி இதழின் கல் விப்பயணம் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக பாலா குறிப்பிட்டார்.

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர், மருத்துவர் சோம.இளங்கோவன் வரவேற்புரை வழங்கினார்.

"பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் ஒரு மக்கள் பல்கலைக் கழகம். மக்களுக்காக தொடங்கப்பட்டு, மக்களுக் காகப் பாடுபட்டு வரும் ஒரு பல்கலைக் கழகம். அதிலே இது மாதிரி ஒரு ஏற்பாடு செய்து இதனை வெளியிடுவதிலே மிகவும் பெருமைப்படுகிறோம். இங்கே ஒரு சிறு குறிப்பைச் சொல்ல விரும்புகிறேன். தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழாவை எப்படி சிறப்பாக கொண்டாடலாம் என ஆசிரியர் அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது மணிசுந்தரம் அவர்கள் அப்போது திருச்சி யில் இருந்தார்கள்.அவர்கள் அப்போது பெண்களுக்கு ஒரு தொழில் நுட்பக் கல்லூரியை தஞ்சையில் ஆரம்பியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அப்போது சுந்தரேசன் என்று ஒரு மாவட்ட ஆட்சியர் இருந்தார். அவர் கொடுத்த அந்தப் பொட்டல் காட்டில் தொடங்கப்பட்டதுதான் மகளிருக்கான பாலிடெக்னிக்.

பின்னர் உலகிலேயே பெண்களுக்கு மட்டும் என பொறியியல் கல்லூரி தொடங் கப்பட்டு இன்று அது பெரியார்-மணி யம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழகமாக வளர்ந்தோங்கி நிற்கிறது. அதில் படித்த மாணவிகள் சிங்கப்பூரில், அமெரிக்காவில், இங்கிலாந்தில் இப்படி உலகம் முழுவதும் அங்கு படித்த மாணவிகள் இருக்கிறார்கள். ஆசிரியர் வந்தால் தேனீக்கள் போல மொய்த்துக் கொள்வார்கள், அந்த மாதிரி அக்கல்வி நிறுவனம் பரவியிருக்கிறது. அந்த பல்கலைக் கழகத்திலே ஆகஸ்ட் 2007இல் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் என்னும் பிரிவினை ஆரம்பித்து, அங்கே ஒரு நூலகம் அமைத்து அங்கே தந்தை பெரியாரின் அத்தனை படைப்புகளையும் நூல்களையும் சேர்த்து வைத்து அதன்மூலமாக ஆராய்ச்சிக் கருத் தரங்குகளும், ஆராய்ச்சி சொற்பொழிவு களும், பயிற்சி அரங்குகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இவை அங்கு அய்யா கு.வெ.கி. ஆசான் அவர்கள் பெயரிலும், டாக்டர் வெங்கட நாகராசன் பாபு அவர்கள் பெயரிலும், நீதியரசர் சோமசுந்தரம் அவர்கள் பெயரிலும் மற்றும் முன்னாள் மாணவர்கள் பெயரிலும் நடத்தப்பட்டு வரு கின்றன.

அடுத்ததாக அங்கே ஓர் ஆராய்ச்சி இதழை ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்பினோம்.கரந்தை தமிழ்ச்சங்கத்தின் சார்பாக 'தமிழ்ப்பொழில்' என்னும் ஆராய்ச்சி இதழ் பல ஆண்டுகளுக்கு முன்னால் நடத்தப்பட்டது.பலர் ஆராய்ச்சி இதழை நடத்தியிருக்கிறார்கள். உலக அளவிலே தந்தை பெரியாரைக் கொண்டு சேர்க்க வேண்டும். பகுத்தறிவைக் கொண்டு சேர்க்க வேண்டும். தமிழர்கள், திராவிடர்களின் நாகரிகம், பண்பாட்டைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற அள விலே சிந்தித்து, அந்தப் பல்கலைக் கழகத் தின் முக்கிய பணியாக இதையும் சேர்த்து, அதிலே ஓர் ஆசிரியர் குழுவையும் ஏற் படுத்தி, அதிலே நமக்கெல்லாம் மிகவும் பயன்படும் அறிவுசால், அடக்கமுடைமை, கருத்து வளம் இவையெல்லாம் ஒன்று சேர்ந்து இருக்கும் இளம் பேராசிர்யர் ரவிசங்கர் கண்ணபிரானை அழைத்தோம்.அவர் பல தளங்களில் நல்ல தொடர்பில் உள்ளவர். உலக அளவில் உள்ள பல் கலைக் கழகங்களில் உள்ள தமிழ் ஆராய்ச் சியாளர்களோடு தொடர்பில் இருப்பவர். அவருடைய படைப்புகளைப் பார்த்திருப் பீர்கள். அறியப்படாத தமிழ்மொழி போன்ற நூல்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இப் போது சமஸ்கிருதமும் தமிழும் என்று ஒரு நூலை எழுதியிருக்கிறார்.அவரை அணுகி, அவரிடம் கேட்டு, அவரோடு முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன் அவர்கள், பேரா.காளிமுத்து அவர்கள், பேரா.நம்.சீனிவாசன் அவர்கள், முனைவர் நேரு அவர்கள், சிங்கப்பூர் பேரா.திண்ணப்பன் போன்றவர்களை இணைத்து ஆசிரியர் குழு அமைக்கப்பட்டது.

இதழ் தரமாக இருக்கவேண்டும், ஆராய்ச் சிக் கட்டுரைகளாக இருக்கவேண்டும், அதற்கு அடிப்படை ஆதாரங்கள் தரப்பட வேண்டும்,என்பதையெல்லாம் கேட்டு வாங்கினோம். இதற்கு வாழ்த்து கேட்டதற்கு வேந்தர் அய்யா ஆசிரியர் அவர்கள் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையே அனுப்பி விட்டார். அந்த ஆராய்ச்சிக் கட்டுரையிலே திராவிடம் என்றால் என்ன?அய்யா கால்டுவெல்லில் ஆரம்பித்து இன்றுவரை திராவிடம் எப்படியெல்லாம் சொல்லப்பட்டி ருக்கிறது? வடமொழியிலே எப்படி திரா விடம் சொல்லப்பட்டிருக்கிறது? புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் வெண்பா எழுதி எப்படியெல்லாம் திராவிடத்தை சொல்லியிருக்கிறார் என்று ஆராய்ச்சிக் கட்டுரையாகவே எழுதிவிட்டார்கள்.

இதழுக்கு வாழ்த்து சொன்னவர்களைப் பற்றி நன்றியோடு சொல்லிக்கொள்ள ஆசைப் படுகிறேன். இங்கே சிகாகோ பல்கலைக் கழகத்திலே பேரா.சாஷா எபிலிங்க் அவர் கள் சிறப்பாக வாழ்த்துரை கொடுத்துள்ளார் கள்.அய்யா அவ்வை நடராசன் அவர்கள் 'திராவிடப் பொழில் என்பது காலத்திற்கு வேண்டிய கைவாள், எழுச்சிக்கு வேண்டிய தூண்டுகோள்  "என்று வாழ்த்துரை எழுதி யிருக்கிறார். அய்யா மறைமலை இலக்கு வனார் அவர்கள் "படிப்பதும், படிப்பதை வாதிடுவதும், எப்பொருள் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதும் பகுத்தறிவாளர் செயல்முறை அன்றோ" என்று வாழ்த்துரை சொல்லியிருக்கிறார். மனோன்மணியம் சுந் தரனார் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தர் அய்யா வேதகிரி சண்முகசுந்தரம் அவர்கள் "அரிசியில் ஆரம்பித்து, ரைஸ் ஆகி, ரோமானிய வணிகத்திலே எப்படி இருந்தார்கள் "என்பதையெல்லாம் குறிப் பிட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

இதையெல்லாம் பழங்கதைகளாக எண்ணாமல், ஆராய்ச்சியாளர்கள், பல் கலைக்கழகங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில், தக்க ஆதாரங்களோடு தர வேண்டும் என்று இதனைத் தொடங்கியிருக்கிறோம். உங்கள் அனைவரின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை. பலர் எங்களை அழைத்து இதழைப் பாராட்டி சொன்னவண்ணம் இருக்கிறார்கள். இது மேலும் தொடரும்.எங்களால் முடிந்ததைத் தொடர்ந்து செய்வோம் என்று ஆசிரியர் குழுவின் சார்பிலே தெரிவித்து உங்களை யெல்லாம் வணங்கி இந்த ஆய்வரங்கத் தைத் தொடங்கி வைக்கிறேன். ஆய்வரங் கம் முடிந்தபின் அய்யா ஆசிரியர் அவர் கள் மதிப்புரையை வழங்குவார்கள்.அய்யா ஆசிரியர் அவர்களின் பங்கேற்பு இன்று நமக்குக் கிடைத்த அரிய வாய்ப்பு" என்று  உரையாற்றி மருத்துவர் சோம.இளங் கோவன் ஆய்வரங்கத்தைத் தொடங்கி வைத்தார்.

அழகு தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறப்பாக இணைப்புரையை தோழர் அறிவுப்பொன்னி வழங்கினார்.

ஆய்வரங்கத்தின் தொடக்கத்தில், திராவிடப்பொழில் இதழில் வெளிவந்துள்ள முனைவர் பேரா.இரா.அறவேந்தன் எழு திய "நூற்றாண்டுக்கு முந்தைய சைவ சபை யில் திராவிடமும் ஆரியமும்" என்னும் கட்டுரை பற்றிய ஆய்வுரையினை தோழர் இளங்கோ மெய்யப்பன் நிகழ்த்தினார்.

தொடர்ந்து பேரா.கண்ணபிரான் இரவி சங்கர் எழுதிய 'Dravidian Canvas in Sanga Tamil' என்னும் ஆங்கிலக் கட்டுரை பற்றிய ஆய்வுரையினை முனைவர் இர.பிரபா கரன் அவர்கள் தமிழில் அழகாக விளக்கி ஆய்வுரையினை வழங்கினார்கள்.

பேரா. மாத்வி பொட்லூரி அவர்கள் எழுதிய "Quest to breaking the Caste Barriers in India and across the world -Can 'DNA' Testing Help'  என்னும் ஆங்கிலக் கட்டுரை பற்றிய ஆய்வுரையினை முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் (திராவிடப் பொழில் இதழின் சிறப்பு ஆசிரியர்) தமிழில் வழங்கினார். திராவிடப்பொழில் இதழின் நோக்கங்களையும், ஆசிரியர் அவர்களின் தொலை நோக்குப் பார்வையால் விளைந் துள்ள திராவிடப் பொழில் இதழை மென் மேலும் வளர்த்தெடுப்போம் என்னும் உறுதிமொழியோடு தன்னுடைய ஆய் வுரையை வழங்கினார்.

முன்னாள் துணைவேந்தர் பி.ஜெக தீசன் அவர்கள் எழுதிய "British and European Sankritist Scholars and the Foundations of Indian Culture and Society " என்னும் ஆங்கிலக் கட்டுரை பற்றிய ஆய்வுரையினை பேரா. முனைவர் வாசு.அரங்க நாதன் அவர்கள் ஆங்கிலத்திலேயே வழங்கினார்.

பேரா.முனைவர் .காளிமுத்து எழுதிய "தமிழ் நாடும் தந்தை பெரியாரும் " என்னும் கட்டுரை பற்றிய ஆய்வுரையை தோழர் ஜெயா மாறன் வழங்கினார்.

முனைவர் வா.நேரு எழுதிய "திராவிட இயக்கமும் கறுப்பின உயிர்களும் உயிர் களே; இயக்கமும்" என்னும் கட்டுரை பற்றிய ஆய்வுரையினை முனைவர் சொ.சங்கரபாண்டி வழங்கினார்.

ஆய்வுரையினை நிகழ்த்திய ஒவ் வொருவரும் கட்டுரைகளின் சிறப்பினைக் குறிப்பிட்டதோடு, விடுபட்ட செய்திகளை யும், தங்கள் கருத்துகளையும் எந்தவிதமான தயக்கமும் இன்றி பதிவு செய்த விதம் மிக வும் அருமையாகவும் பாராட்டக்கூடியதாக வும் இருந்தது. ஓர் ஆய்வரங்கம் எப்படி அமையவேண்டும் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகவும் அமைந்தது.

ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் நடந்த ஆய்வரங்கத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை நிகழ்வில் பங்க«ற்றனர். நிறை வாக தன்னுடைய கருத்துகளையும் மகிழ்ச் சியையும், திராவிடப்பொழில் இதழின் புரவலர், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்)வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பகிர்ந்து கொண்டார். நல்ல ஆய்வாளர்களால் வழங்கப்பட்ட, இந்த மதிப்புரைகள் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக ஆசிரியர் குறிப்பிட்டார். ஆய் வரங்கத்தில் சொல்லப்பட்ட சில கருத்து களுக்கு விளக்கத்தையும் ஆசிரியர் அவர் கள் அளித்தார்கள். (முழு உரை விடுதலை யில் வரும்.)

நிறைவாக அறிவுவழிக் காணொலி இயக்கத்தின் இயக்குநர் தோழர் சேரலாதன் அவர்கள் நன்றி கூறினார்.இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆரம்பித்த ஆய்வ ரங்கம் இரவு 11.30 மணியளவில் நிறைவு பெற்றது. இந்தியாவிலிருந்தும், அமெரிக்கா விலிருந்தும்,உலகத்தின் பல பாகங்களிலி ருந்தும் பல ஆளுமைகள் கலந்து கொண்ட, தத்துவச்செறிவு மிக்க ஆய்வரங்கமாக, திராவிடப் பொழில் முதல் இதழ் ஆய்வ ரங்கம் அமைந்தது. தந்தை பெரியாரின் தத்துவம் உலகமயம் ஆகிறது என்பதற்கு பெரும் எடுத்துக்காட்டான நிகழ்வாக அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Comments