மதுரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற சிறப்புக்கூட்டம்

மதுரை, பிப். 26- மதுரையில் விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் சிறப்புக் கூட்டம்  20.02.2021 சனிக்கிழமை மாலை 6.05 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. மதுரை யானைக்கல் எஸ்..எஸ்.பழக்கடையில் நடைபெற்ற விடுதலை வாசகர் வட்ட கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரை யும் விடுதலை வாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் இராமச்சந்தி ரன் வரவேற்று, தான் 6 மாதத்திற்கு ஒருமுறை வட நாட்டிற்கு பணி நிமித் திமாக செல்லும் வாய்ப்பு பெற்றவன் என்றும், இன்றும் அங்கு இரவு ஆனால் மகாபாரதக் கதைகளை மக் களை உட்காரவைத்து சொல்லிக் கொண்டிருப்பதையும் அங்கு இருக் கும் பிற்போக்குத்தனத்தை சுட்டிக் காட்டி, தமிழகத்தில் நாம் உயர்வு பெற்றதற்கு காரணம் தந்தை பெரி யார் என்பதையும். அவரால் நடத்தப் பட்ட விடுதலை தனிச்சிறப்பு வாய்ந் தது. விடுதலையை நாம் வளர்ப்போம்.விடுதலை வளர,வளர தமிழினம் வளரும் என்று உரையாற்றினார்.

விடுதலை வாசகர் வட்டத் தலை வர் இரா.இராசேசுவரி நிகழ்வுக்கு தலைமை ஏற்று உரையாற்றினார். அவர் தனது உரையில் "எந்த இத ழுக்கும் தமிழ்நாட்டில் வாசகர் வட்டம் கிடையாது, விடுதலையைத் தவிர. விடுதலைக்கு ஏற்பட்ட இன் னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அத்த னையையும் தாண்டி இன்று 85 ஆண் டுகளுக்கு மேலாக தொடர்ந்து வெளிவரும் பத்திரிக்கை. விடுதலை.

விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். நன்றி. தொடர்ந்து செயல்படுவோம். விடுதலையைப் பலப்படுத்துவோம் "என்று குறிப்பிட்டார்.

விடுதலை வாசகர் வட்டத்தின் செயலாளர் .முருகானந்தம் முன் னிலை வகித்து 'விடுதலை வாசகர் வட்டத்தை தொய்வு இல்லாமல் தொடர்ந்து நடத்துவோம்" என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.

இம்மாத விடுதலைஎன்னும் தலைப்பில் செயற்குழு உறுப்பினர் பா.சடகோபன் உரையாற்றினார். அவர் தனது உரையில் விடுதலையில் வெளிவந்த 'எனது ஹீரோ யார் ' என்னும் தலைப்பில் உரையாற்றிய பெரியார் விருது பெற்ற கரு.பழனியப்பன் அவர்களின் உரையின் சிறப்பையும், கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களின் 'டார்வின்' பற்றிய உரையைப் பற்றியும் மற்றும் விடுதலையில் வெளிவந்த உடற் கொடை போன்ற செய்திகளைக் குறிப்பிட்டு விடுதலை எப்படி மற்ற நாளிதழ்களில் இருந்து தனித்து நிற்கிறது என்று உரையாற்றினார்.

நிகழ்விற்கு  இணைப்புரையை திராவிடர் கழகத்தின்  மாவட்ட செய லாளர் கவிஞர்.சுப.முருகானந்தம் வழங்கினார்.

திராவிடர் கழகத்தின் மாநில அமைப்புச்செயலாளர் வே.செல்வம் தனது உரையில் "கடந்த ஓராண்டு காலம் கரோனா பேரிடரை முன் னிட்டு முடங்கிக் கிடந்த பிரச்சாரங் கள் தொடங்கியுள்ள நிலையில் நமது வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மதுரையில் விடு தலை வாசகர் வட்டம் தொய்வில்லா மல் தொடர்ந்து நடத்தப்பட வேண் டும் என அறிவுறுத்தியதன்படி உட னடியாக ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது.தொடர்ந்து விடுதலை வாசகர் கூட்டம் இந்த இடத்திலேயே மாதந் தோறும் நடைபெறும். ஒவ்வொரு தோழரும் வரும்போது தனது நண் பர்களை அழைத்து வரவேண்டும் " என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.

தொடர்ந்து  ."விடுதலை வாழ்ந் தால்  எவரே வீழ்வார்? விடுதலை வீழ்ந்தால் எவரே வாழ்வார்?" என்னும் தலைப்பில் கழகப் பேச்சாளர் வழக் குரைஞர் பூவை.புலிகேசி சிறப்புரை யாற்றினார். அவர் தனது உரையில், பொருள் பொதிந்த தலைப்பு கொடுத் திருக்கின்றீர்கள் என்று குறிப்பிட்டு, தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் விடுதலையைப் பற்றிக் குறிப்பிட்டது, ஓர் இதழாளராக தந்தை பெரியார் எப்படித் தனித்து நிற்கிறார், பேராசிரியார் இறையனார் அவர்கள் எழுதிய 'இதழாளர் பெரி யார்' என்னும் புத்தகத்தின் சிறப்பு, தந்தை பெரியார் அவர்களின் மறை விற்குப்பின்னாலும் விடுதலை எப்படி தொடர்ச்சியாக ஆற்றலோடு வெளி வருகிறது என்பதையும், அய்யா ஆசிரி யர் அவர்கள் பொறுப்பு ஏற்றதால் விடுதலை தொடர்ந்து வருகிறது என் பதனை தந்தை பெரியார் குறிப்பிட் டதையும் திராவிடர் கழகத்தின் இயக்க ஏடுகள் பற்றிய சிறப்பினையும் குறிப்பிட்டார்.

'தமிழ் நாடு தமிழருக்கே 'என்னும் முழக்கத்தை தாங்கி வந்த இதழ் விடு தலை. 1938 இந்தி எதிர்ப்பு போராட்ட நிகழ்வுகளை, சட்டசபைக் குறிப்புகள் உட்பட அத்தனையையும் வெளிக் கொணர்ந்த இதழ் விடுதலை. தமிழை உரிய இடத்தில் அமரவைத்த இதழ் விடுதலை, தமிழர்களை அரசு வேலை களில் உட்காரவைத்த இதழ் விடு தலை, சமூக நீதிக்காக தொடர்ச்சியான செயல்பாடுகளைக் கொண்ட விடு தலை என விடுதலையால் பெற்ற உரிமைகளை, அன்றும் இன்றும் என்ற வகையில் அன்று தந்தை பெரியார் அவர்கள் இருக்கும்போது இன்று அய்யா ஆசிரியர் அவர்கள் இருக்கும்போது என்று ஒப்பிட்டு ஏறத்தாழ 70 நிமிடங்கள் நிறைவான உரையை ஆற்றினார்.

சிறப்புரைக்குப்பின்  உரையின் சிறப்பினைக் குறிப்பிட்டு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு சில நிமி டங்கள் உரையாற்றினார். நிறைவாக பீபிகுளம் சுரேசு நன்றியுரையாற்ற 8.30 மணியளவில் கூட்டம் நிறைவு பெற்றது.

விடுதலை வாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப்பினர்களாக செல்ல.கிருட்டிணன், போட்டோ இராதா, செல்வ.சேகர், பெரி.காளியப்பன், பீபிகுளம் இரா.சுரேசு, அழகுபாண்டி, தனுஷ்கோடி ஆகியோர் பொறுப் பேற்றுள்ளனர்.

காப்பாளர் சே.முனியசாமி, மண் டலச்செயலாளர் நா.முருகேசன், மண்டலத்தலைவர் கா.சிவகுருநாதன், மந்திரமா?தந்திரமா புகழ் சுப.பெரி யார்பித்தன், வழக்குரைஞர் அணிச் செயலாளர் மு.சித்தார்த்தன், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் .. எரிமலை, மகளிரணி இராக்கு தங்கம், அல்லிராணி, நாகராணி, ஆட்டோ செல்வம், ஓய்வு பெற்ற ஆசிரியர் இராமசாமி, இளைஞர் அணி பேக் கரி கண்ணன், சிவா, ஆட்டோ தங்க ராசு, விராட்டிபத்து சுப்பையா, அனுப்பானடி கனி, பவுன்ராசா, வேல்துரை, வண்டியூர் கிருஷ்ண மூர்த்தி, சோ.இராமமூர்த்தி, மாரி முத்து, செல்வகுமார் உள்ளிட்ட பல ரும் கலந்து கொண்டனர்.

Comments