இரா.பிரபாகரன் - மஞ்சு மணவிழா தமிழர் தலைவர் ஆசிரியர் காணொலியில் வாழ்த்துரை

நீலப்பாடி, பிப். 19- நாகை மாவட் டம், கீழ்வேளூர் ஒன்றியம், இராயத்தமங்கலம் இராம சாமி - பரிபூரணம் ஆகியோ ரின் மகனும் விடுதலை செய் திப் பிரிவில் பணியாற்றிய இரா.மாதவன்  சகோதரரு மான இரா.பிரபாகரனுக்கும் திருவாரூர் மாவட்டம், வேத சாலை, ரொக்க குத்தகை என். மாரியப்பன் - சந்திரிகா ஆகி யோரின் மகள் மா. மஞ்சுவுக் கும் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா 15.2.2021 அன்று காலை 10.30 மணியள வில் நீலப்பாடி .ஜெ.திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நாகை மாவட்ட துணைச் செயலாளர் பாலா. ஜெயக் குமார் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார்.

திருவாரூர் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எஸ். எம்.கே. அருண் காந்தி, திருமருகல் ஒன்றிய தலைவர் பொன்.செல்வராசு, கீவளுர் ஒன்றிய தலைவர் துரைசாமி, உழவனின் நில உரிமை இயக்க நிர்வாக மேலாளர் கே.வெங்கோபு, மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்செல்வி, திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.. நெப் போலியன் ஆகியோர் வாழ்த் துரையாற்றினர்.

பிரபாகரன் மஞ்சு ஆகி யோரை உறுதிமொழி ஏற்கச் செய்து மண விழாவினை கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காணொலியில் வாழ்த்துரை வழங்கினார். மணமகனின் சகோதரர் இரா. மாதவன் நன்றி கூறினார்.

நிகழ்வில் திருவாரூர் மாவட்ட . தலைவர் இரா.சிவக்குமார் பொதுக் குழு உறுப்பினர் தெ.செந்தில் குமார், மாவட்ட விவசாய அணி தலைவர் தங்கராசு, சூர னூர் கோவிந்தசாமி, மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணித் தலைவர் முத்துகிருஷ்ணன், நாகை நகர கழக அமைப்பா ளர் நைனா முக மது, சிக்கல் சக்திவேல், சிக்கல் நடராஜன், நாகை மாவட்ட . தலைவர் மு..ஜீவா, தி.மு.. கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய செயலாளர் . கோவிந்தராஜ், தி.மு.. தெற்கு ஒன்றிய செயலாளர் கே. பழனியப்பன், தி.மு. மாவட்ட பொறுப்பாளர் என்.கவுதமன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர் கள், நண்பர்கள், உறவினர்கள் கலந்துகொண்டுமண விழாவை சிறப்பித்தனர்.

Comments