மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் தாராபுரம் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு


தாராபுரம், பிப். 22- மத்திய அரசு நிறுவன வேலைவாய்ப்புகளில் தமி ழர்கள் புறக்கணிப்படுவதாக தள பதி மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி னார்.

"உங்கள் தொகுதியில் ஸ்டா லின்" எனும் தலைப்பில் திருப்பூர் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் 20.2.2021 அன்று மாலை 3.30 மணியளவில் திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் பேருந்து புதிய நிலையம் அருகில் திமுக தலைவர் தளபதி மு.க,ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டதாவது; இங்கு திரண்டுள்ள நீங்கள் உங்களது கோரிக்கைகளை, குறை களை என்னிடம் ஒப்படைத்துள் ளீர்கள், இனிமேல் அது என்னு டைய பிரச்சனை! திராவிட முன் னேற்ற கழகம் 3 மாதத்தில் ஆட்சி பொறுப்பை ஏற்கும்! ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் உங்களது கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்படும்! மனுக்கள் கொடுத்த அனைவரும் அதற்கான அட் டையை பெற்றுக் கொள்ளுங்கள். அந்த அட்டைக்கு மரியாதை உள்ளது.திமுக ஆட்சி பொறுப் பேற்ற 100 நாளில் உங்களது கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் அந்த அட்டையுடன் நீங்கள் கோட்டைக்கு நேரடியாக வந்து என்னை சந்திக்கலாம்! நான் உங்களிடம் மனுக்கள் பெறுவது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து குறை சொல்கிறார். மனுக்கள் தாங்கிய இந்த பெட்டி பணப்பெட்டி அல்ல! மக்களின் மனப்பெட்டி! மனசாட்சி பெட்டி! என்பதை பழனிசாமி அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

நான்கு ஆண்டுகளாக எதையும் செய்யாமல் தற்போது வானத்தை தொடும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். 2010 ல் திமுக ஆட்சியில் 28.66 சதவிகிதமாக இருந்த பொருளாதாரம் தற்போ தைய அதிமுக ஆட்சியில் 9.10 சதவிகிதமாக உள்ளது.திமுக ஆட் சியில் உபரி நிதி இருந்தது.ஆனால் தற்போதை ஆட்சியில் 5 லட்சம் கோடி கடனை வாங்கியுள்ளது தான் சாதனை! அதிமுக ஆட்சி புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை, இருக்கின்ற வேலைவாய்ப்புகளி லும் தமிழர்களுக்கு உத்தரவாதம் இல்லை, இரயில்வே துறை, அஞ்சல் துறை, நெய்வேலி நிலக்கரி நிறுவனம், வருமான வரித்துறை, வங்கிகள், சுங்கத்துறை ஆகிய மத்திர அரசின் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் அனைத்தும் வடநாட்டினருக்கு வழங்கப்பட்டு, தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். 90 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்துள்ளார்கள். தமிழ்நாடு வேலை இல்லாத நாடாக உள்ளது. திமுக ஆட்சியில் 25.06.2008இல் திருச்சியில் துவக்கி வைக்கப்பட்ட காவிரி-குண்டாறு திட்டம் தற்போதைய ஆட்சியில் புதிய திட்டம் போல் துவக்கப்படுகிறது.

ஏழை,எளிய மக்கள் கூட்டுறவு வங்கியில் 5 பவுன் வரை பெற்ற கடன், மகளிர் சுயஉதவி குழுக்கள்  வங்கியில் வாங்கிய கடன் திமுக ஆட்சி அமைந்தவுடன் தள்ளுபடி செய்யப்படும்.தற்போது மகளிர் சுய உதவி குழுக்களின் செயல் பாட்டை சிதைத்துள்ளார்கள். திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவி குழுக்கள் சீரமைக்கப்படும், மகளிர் சுயமரியாதையோடு வாழும் வாழ திமுக அரசு பாடுபடும், மகளிருக் கென தனி நீதிமன்றம் திமுக ஆட் சியில் அமைக்கப்படும். இவ்வாறு அவர் உரையில் குறிப்பிட்டார்.

Comments