பெருங்கவிக்கோ வா.மு.சே.வுக்கு கழக சார்பில் வரவேற்பு

வடக்குத்து, பிப். 22- குமரி முதல் சென்னை வரை பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமன் குழுவினர் எங்கும் தமிழ் எதி லும் தமிழ் என வலியுறுத்தி பிரச்சார பயணம் செய்து வருகின்றனர். 

திராவிடர் கழகம் சார்பில் வடக்குத்து அண்ணாகிராமத் தில் பெரியார் படிப்பகத்தில் மாவட்ட தலைவர் த.சுப்பையா தலைமையில் 18.2.2021 அன்று மாலை 6 மணிக்கு நடந்தது. மாவட்ட அமைப்பாளர் மணி வேல் வரவேற்புரையாற்றினார். 

உ.த.க. தலைவர் டாக்டர் செந்தில், கோபாலகிருட்டி ணன்,  முரளி, முகிலன், பெரி யார்செல்வம், புலவர் ராவ ணன்,  மாவட்ட தலைவர் தண்டபாணி, ரத்தினசபாபதி,  தொல்காப்பியன், குணசேக ரன்,  இந்திரஜித்,  முருகன், விசயா கோபால், உதயசங்கர், வேலு, இராமநாதன், ரேவந்த், ஆண்டணி, நூலகர் கண்ணன், தங்க.பாஸ்கர் ஆகியோர் பேசியபின் கழகப் பொதுச் செயலாளர் துரைசந்திரசேக ரன் பாராட்டுரை வழங்கி னார்.வா.மு.சேதுராமன் பயண நோக்கவுரையாற்றி னார். பேராசிரியர் கிருட்டிண மூர்த்தி, மாணிக்கவேல் பாடல் கள் பாடினர்.தருமலிங்கம், திராவிடன், வெங்டாசலம், பங்கேற்றனர்.

Comments