அன்னையார் நூற்றாண்டு விழாவில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு வெற்றி தோட்டி லைன் ‘அம்பேத்கர் நகர்' எனப் பெயர் மாற்றம்

வேலூர், பிப். 6-- வேலூரில் கடந்த 10.03.2019 அன்று அன்னை மணியம் மையார் நூற்றாண்டு தொடக்கவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. தொண்டறத்தாய் பிறந்த வேலூரில் நூற்றாண்டு தொடக்கவிழாவை நடத்திட வேண்டும் என தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் விருப் பத்தின்பேரில், அவ்விழா அன்னையார் வாழ்க்கை வரலாற்று கலைநிகழ்ச்சிக ளுடன் சீரும் சிறப்புமாக நடை பெற்றது.

இவ்விழாவில் வேலூர் கஸ்பா பகுதியில் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் வாழும் இடத்திற்கு நீண்ட காலமாக தோட்டி லைன் என்ற ஜாதி பெயரில் அவ்விடம் அழைக்கப்பட்டதைக் கண்டித்து, அப்பெயரை டாக்டர்.பி.ஆர்.அம் பேத்கர் நகர் என்று உடனடியாக மாற்றிடக் கோரி நூற்றாண்டு விழா தீர்மானமாக கழகத்தின் சார்பில் நிறைவேற்றினோம்.

சட்டப்போராட்டம்

வேலூர் கஸ்பாவின் மேற்கு பகுதியான இவ்விடத்தில் வசிக்கும் கனரா வங்கி அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்ற தோழர்.கே.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் தான் இக்கோரிக் கைகாக பல்வேறு வடிவங்களில் சட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார். அத்தோழரின் கோரிக்கையை ஏற்றுதான் நம் விழா வில் தீர்மானம் நிறைவேற்றினோம். இப்பகுதியில் நகராட்சி தூய்மைப் பணியாளர்களான அருந்ததி சமு தாய மக்கள் வாழும் இடத்தை தோட்டி லைன் என்று, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, அஞ்சல் முகவரி, சான்றிதழ்கள் என அனைத்திலும் இவ்இழிவான பெயர் இடம்பெற்றிருப்பதை அச்சமுதாய மக்கள் பெரும் அவமானமாகக் கரு தினார்கள். அச்சமூகத்தைச் சேர்ந்தவ ரான தோழர்.கே.கிருஷ்ணமூர்த்தி, அந்த ஜாதி இழிவு பெயரை நீக்க மாநகராட்சி ஆணையர், ஆட்சியர் என பல நடவடிக்கைகள் மேற் கொண்டார். இறுதியாக மாநகராட்சி மன்றத்தில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத் கர் நகர் என தீர்மானம் நிறைவேற்றவும் தொடர்முயற்சி மேற்கொண்டார்.

மாநகராட்சி தீர்மானம்

வேலூர் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியும், அரசு கெஜட்டில் இடம்பெறச் செய்யாமல் உள்ளாட் சித் துறை அலட்சியம் செய்தது. 2014இல் பலமுறை முதல்வரிடமும் நேரில் வலியுறுத்தியுள்ளனர் அப் படியும் பெயர் மாற்றம் நிகழாமல் போகவே, வேறு வழியின்றி சென்னை உயர்நீதி மன்றத்தில் 2018இல் தோழர் கே.கிருஷ்ணமூர்த்தி தன் சொந்த செலவில் அரசின் மீது வழக்கு தொடுத்தார். வேலூர் மாநகராட் சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மான மான தோட்டி லைன் என்பதை டாக்டர்.பி.ஆர்.அம்பேத்க நகர் என பெயர் மாற்ற இயலாது என அரசு வழக்குரைஞர்கள் 5பேர் வாதிட் டுள்ளனர். அரசு தரப்பில் பலமுறை வாய்தாக்கள் பெற்றுள்ளனர். இறு தியாக அரசின் போக்கைக் கண்டித்து, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இரண்டு ஆண்டுகள் கழித்து 04.07.2019இல் டாக்டர்.பி.ஆர்.அம் பேத்கர் நகர் என்ற பெயர் மாற்ற தீர்ப்பினை உயர்நீதிமன்றம் வழங்கி யுள்ளது.

தோழர் கே.கிருஷ்ணமூர்த்தி

8 ஆண்டுகள் தொடர் போராட் டமாக நடத்திய தோழர்.கே.கிருஷ்ண மூர்த்தி அவர்கள் கூறியது; இத்தீர்ப்பு வெளியிட்டபோது சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்த எனக்கு, சுமார் 5000 ஆண்டுகளாக தீண்டாமையை நம்மீது சுமத்திய ஜாதிவெறியர்களுக்கு சம்மட்டி அடியாக அண்ணன் அம்பேத்கர் எழுதிய சட்டத்தின் மூலமாக தீண்டாமை ஒரு பெருங் குற்றம் என்று சட்டம் அமலாக்கிய போது (26.11.1950) அண்ணல் அம் பேத்கருக்கு இருந்த மனநிலை போல எனக்கும் தோட்டி லைன் என்பதற்கு பதிலாக டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் நகர் என்று நீதிமன்றத்தீர்ப்பு வெளி யான போது அதே மனநிலை எனக்கு இருந்ததுஎன நெகிழ்வோடு குறிப் பிட்டார்.

உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்...

மேலும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ள தோட்டி லைன் என்பதை மாற்றி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நகர் என்று பெயர் மாற்றம் செய்யும்படி வேலூர் மாவட்ட ஆட்சியர், வேலூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் டி.ஆர்.. வேலூர் மாநகராட்சி ஆணையர் என அனைவருக்கும் தீர்ப்பின் நகலுடன் பல கோரிக்கை மனுக்கள் போட்டும் பலமுறை அலைய விட்டார்கள். இறுதி மனு வில் பெயர் மாற்றத்திற்கு ஆவன செய்யவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் போடுவேன் என்றும், மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்து வேன் என்றும், எங்கள் பகுதி மக்க ளுடன் வரும் 2021ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவ தாகவும் கூறினேன். இதன் விளைவாக 16.11.2020 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பெயர் பட் டியலில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் நகர் என்று பெயரிட்டு வெளியிடப் பட்டது.

8 ஆண்டுகள் போராட்டம்

சுமார் 8 ஆண்டுகள் தமிழக அர சுடன் சட்டப்போராட்டம் நடத்தி, என் சமுதாய மக்கள் ஜாதி இழிவு நீங்கி தலைநிமிர்ந்து மானத்தோடு சகமனிதர்களை போல் வாழவும், குறிப்பாக இளைஞர் மற்றும் மாண வர்களுக்கும், வரும் தலைமுறைக்கும், என் சமுதாய மக்களுக்கும் ஒரு கவுரவமான முகவரி அங்கீகாரத்தை பெற்றுத் தந்திருக்கிறேன் என தோழர் கே.கிருஷ்ணமூர்த்தி உணர்ச்சியோடு குறிப்பிட்டார்.

தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

இச்செய்திகளை துண்டறிக்கை யாக அச்சிட்டு பரப்பியுள்ளார். என் னிடமும் தொலைபேசியில் தெரிவித்தார். 24.01.2021 அன்று, வி.சட கோபன், (தலைவர், வேலூர் மண்டல திராவிடர் கழகம்) .ஈஸ்வரி, (தலை வர், வேலூர் மாவட்ட கழக மகளி ரணி) நெ.கி.சுப்பிரமணியன் (அமைப் பாளர், வேலூர் மாநகர கழகம்) .இரம்யா (குடியாத்தம் கழக மகளிர் பாசறை வி.பெருமாள் (குடியாத்தம் நகர இளைஞரணி) ஆகியோர் தோழர் கே.கிருஷ்ணமூர்த்தி அவர் களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவர் அமைத்த டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் நகர் வரவேற்பு வளைவு மற்றும் மாநகராட்சி சார்பில் பொருத்தப்பட்ட டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் நகர் அறிவிப்பு பலகை யையும் ஒளிப்படம் எடுத்தோம். அவரின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என கழகத்தின் சார்பில் பாராட்டினோம்.

ஜீவன் பிரசாத் அறக்கட்டளை

தோழர் கே.கிருஷ்ணமூர்த்தி அவர் கள், இளம் வயதிலேயே இறப்பு எய்திய தன் ஒரே மகன் ஜீவன் பிரசாத் பெயரில் அறக்கட்டளை நிறுவியுள் ளார். அதன்மூலம் பல்வேறு சமூகநல அறப்பணிகள் செய்து வருகிறார். அப் பகுதியில் டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் படிப்பகம் அமைத்துள்ளார். அவரின் 15ஆண்டுக்கும் மேலான ஜாதிப் பெயர், இன இழிவு ஒழிப்புக்கான தொடர்முயற்சியையும், டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் நகர் என்ற தீர்ப்பினையும் பாராட்டி, பயனாடை அணிவித்தும், கழக நூல் கள் அன்பளிப்பாக வழங்கி வாழ்த்தி னோம். தோழர்.கே.கிருஷ்ணமூர்த்தி யும் தான் வாழும் பகுதிக்குமான வாழ்வு' பெயர் பெற்றதின் நினைவாக விடுதலை இதழ் ஒரு ஆண்டு சந்தா வும், உண்மை மாதமிருமுறை இதழ் ஒரு ஆண்டு சந்தாவும் வழங்கினார்.

அதோடு, அன்னை மணியம்மை யார் நூற்றாண்டு தொடக்கவிழாவில் தீர்மானம் நிறைவேற்றியமைக்கும், கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், கழக தோழர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

நேர்காணல்: வி.சடகோபன்,

தலைவர், வேலூர் மண்டல

திராவிடர் கழகம்.

Comments