நாடு முழுவதும் ஒரு கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி

புதுடில்லி, பிப். 21- இந்தியாவில் 34 நாட்களில் ஒரு கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதுநாடு முழுவதும் 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16ஆம் தேதி தொடங் கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

19.2.2021 அன்று காலை 8 மணி வரை, நாடு முழுவதும் மொத் தம் ஒரு கோடியே 1 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 62 லட்சத்து 60 ஆயிரத்து 242 சுகாதார பணியாளர்களுக்கு முதல் டோசும், 6 லட்சத்து 10 ஆயிரத்து 899 பேருக்கு இரண் டாவது டோசும், 33 லட்சத்து 16 ஆயிரத்து 866 முன்களப் பணியாளர்களுக்கு முதல் டோசும் வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடும் பணி தொடங்கிய 34 நாட்களான கடந்த 18ஆம் தேதி வரை ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்பட வில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை 1 கோடி டோஸ் வாங்குகிறது:  அண்டை நாடான இலங்கைக்கு 5 லட்சம் டோஸ் கரோனா தடுப்பு மருந்தை இந்தியா  இலவசமாக வழங் கியது.

இதைத் தொடர்ந்து ஒரு கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்தை வாங்க புனேவின் சீரம் நிறுவனத்து டன் ஒப்பந்தம் செய்துள்ளது.

Comments