கிரீமிலேயர் கூடாது ஏன்?

ஆசிரியர் : கி.வீரமணி

பல்லாண்டு காலமாக ஜாதியின் பெயரால் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் உரிமைகளற்று வாட, பார்ப்பன சிறுபான்மை கூட்டம் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி தமது வாழ்வையும், வளத்தையும் பெருக்கிக் கொண்டது. வஞ்சிக்கப்பட்ட மக்களின் உரிமை மீட்கும் ஒரு வழியை திறந்துவிட்ட மண்டல் குழு அறிக்கை, பலத்த சர்ச்சைகளுக்கு பிறகு 90களின் தொடக்கத்தில்தான் நடைமுறைக்கு வந்தது. இரண்டு பத்தாண்டுகளில் தனியார்மயமாக்கல், பன்னாட்டு நிறுவனங்களின் வரவு  என்று பல தடைகள் குறுக்கே வர இட ஒதுக்கீட்டின் பலனை முழுமையாக பெரும்பான்மைச் சமூகம் அனுபவித்திராத சூழலில், இந்த குறுகிய கால கட்டத்திற்குகூட உரிமைகள் பகிர்ந்து கொள்ளப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் முன்வைக்கப்படும்  வாதம்தான் கிரீமிலேயர் வாதம், இந்நூலை படித்து முடிக்கும் தருணத்தில் உங்கள் உள்ளத்தில் அய்யங்கள் சில இருந்திருந்தால் தகர்ந்து வீழும்படி இருக்கிறது ஆசிரியரின் இந்த தொகுப்பு.

Comments