ஏட்டு திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     மேற்கு வங்கத்தில் எட்டு கட்ட தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் ஆலோசனையின்பேரில் பாஜகவின் வசதிக்காக இந்த ஏற்பாடு என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

·     கருத்துரிமையை நீதிமன்றங்கள் பாதுகாத்திட வேண்டும். திஷா ரவி, வரவரராவ் பிணையில் விடுவித்தது நீதிமன்றங் களின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பத்ரலேகா சாட்டர்ஜி தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

டெக்கான் கிரானிகல், சென்னை:

·     தமிழ் நாட்டில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு சற்று முன்பாக, வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்திடும் மசோதாவை தமிழ் நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.

·     தமிழகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத்திற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     தமிழக தேர்தலில் மு..ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது என செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இந்திய அரசாங்கத்திற்கும் விவசாயிகளுக்கும் இடையே நடந்து வரும் உரையாடல் முயற்சிகள் அனைவரின் உரிமைகளையும் மதிக்கும் வகையில் ஒரு "சமமான தீர்வுக்கு" வழிவகுக்கும் என்று அய்.நா மனித உரிமைத் தலைவர் மைக்கேல் பேச்லெட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

·     ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத் தலைவர் மோகன் பகவத் இந்து தர்மம் அகண்ட பாரதத்தை நிறுவும் என்றும், இது குறித்து சந்தேகம் வேண்டாம் என்றும் மக்களுக்கு அறி வுறுத்தினார். டாக்டர் மதுகுலா நாகபனி சர்மா எழுதிய சமஸ் கிருத மொழியில்விஸ்வபாரதம்என்ற புத்தகத்தை அறிமுகப் படுத்திய பின்னர் பகவத் பேசினார்.

எகனாமிக் டைம்ஸ்:

·     ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனு குறித்து கருத்து தெரிவிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது ஒரு நடவடிக்கையாகும். ஓபிசி பிரிவினர்க்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் போதிய பிரதிநிதித்துவம் உள்ளதா? என்பது குறித்த விவரங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு மூலம் தெரிய வரும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தி டெலிகிராப்:

·     புதுடில்லியை மறுவடிவமைக்கும் திட்டம் தற்போதுமத்திய விஸ்டா திட்டம்என்று அழைக்கப்படுகிறது. இருப்பி னும், நினைவுச்சின்ன கட்டிடங்களின் புதிய வளாகம் வந்தவு டன், நிச்சயமாக காலனித்துவ முறையீடு ஒரு ஆத்மனிர்பர் மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும். ஏற்கனவே ஒரு நூற்றாண் டுக்கு முன்பு ஒரு மலை இராச்சியத்தை ஆண்ட ஒரு மன்னரால்நரேந்திரநகர்என்ற பெயர் சூட்டப்பட்டது. தற்போது ஒரு வேளைநரேந்திர மகாநகர்’? அல்லதுமோடியாபாத்கூட இருக்கலாம் என வரலாற்றாளர் ராம்சந்திர குஹா குறிப்பிட்டு உள்ளார்.

·     இந்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8 சதவிகிதம் சுருங்குவதாக கணிக்கப்பட்டுள்ளது - இது ஜனவரி 7ஆம் தேதி வெளியிடப்பட்ட தேசிய வருமானத்தின் முன்கூட்டிய மதிப் பீட்டில் தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) முன்னறிவித்திருந்த மைனஸ் 7.7 சதவீதத்தை விட மோசமானது.

- குடந்தை கருணா

27.2.2021

Comments