ஆசிரியருக்குக் கடிதம்

ஆசிரியர் அவர்களுக்கு,

ஊர் செல்ல காட்டும் வழி போல வாழ்வுக்கு நேர் பாதை சொல்வதே - நூல் என்கிற இலக்கணத்திற்கு ஏற்ப தற்போதுள்ள சூழலில் என்ன செய்ய வேண்டும் என்பதை விடுதலை வலியுறுத்த காண்கிறேன். ஆங்காங்கே பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் முத்து முத்தான வாசகங்கள். இரவு எந்த நேரமானாலும் விடுதலை முழுவதும் படிக்காமல் தூங்குவதில்லை.

தினமலர், துக்ளக் போன்ற பத்திரிகைகளுக்குவிடுதலை'தான் தருகிறது சரியான சவுக்கடி. தமிழக அரசுக்கு நாசூக்கான வேண்டு கோளும் உண்டு, கன்னத்தில் அறைவது போன்ற  விமர்சனமும் உண்டு, இதுவன்றோ பத்திரிகைப் பாங்கு.

மத்திய மோடி அரசை விமர்சிப்பதில் எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்கவில்லைவிடுதலை' நாளிதழ்.

திராவிடப் பொழிலுக்குஇரண்டு சந்தாக்கள் ரூபாய் 1,600 செலுத்த விரும்புகிறேன். ‘விடுதலை'க்கு என்னை அறிமுகப்படுத்திய அண்ணா கிராம ஒன்றிய கழகத் தலைவர் இரா.தமிழின்பன் அவர்களுக்கு இத்தருணத்தில் என் நன்றி. ‘விடுதலை' இதழில் 20.1.2021இல் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்குக்கு ரூபாய் 1,600 அனுப்பி வைத்துள்ளேன்.

- தா.மகாலிங்கம், சிதம்பரம்

Comments