சென்னை, பிப். 8- மாநில மனித உரிமைகள் ஆணைய உத்தரவுகள் மாநில அரசை கட்டுப்படுத்தும். மேலும் அந்த உத்தரவு களை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என 3 நீதிபதிகள் அடங்கிய உயர் நீதிமன்ற முழுஅமர்வு தீர்ப்பளித் துள்ளது.
மனித உரிமை மீறல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் மாநில மனித உரிமைகள் ஆணையம், தவறு செய்யும் அதிகாரிகளுக்கு எதிராக அபராதம் விதித்தும், அவர்கள் மீது ஒழுங்கு நட வடிக்கை எடுக்க பரிந்துரைத்தும் மாநில அரசுக்கு உத்தரவிடுகிறது. இந்த உத்தர வுகளை எதிர்த்து தொடர்புடைய அதி காரிகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ். வைத்யநாதன், வி.பார்த்திபன் மற்றும் எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முழு அமர்வு விசாரிக்க தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உத்தரவிட்டு இருந்தார்.
அதன்படி இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள 517 பக்க விரிவான தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
ஒருபோதும் மனித உரிமைகளுக்கு பாதிப்பு அல்லது தீங்குநேர்ந்து விடக் கூடாது என்பதற்காகவும் மனித உரி மைகளுக்கு சட்ட பாதுகாப்பு, கண் காணிப்பை பலப்படுத்தவுமே சட்டரீதியாக மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் உத்தரவுமற்றும் பரிந்துரைகள் அரசை கட்டுப்படுத்தக் கூடியது. அதை காலம் தாழ்த்தாது உடனடியாக அரசு அமல் படுத்த வேண்டும். இல்லையெனில் மனித உரிமைகள் ஆணையத்தின் நோக்கமே சிதைந்துவிடும்.
எக்காரணத்தைக் கொண்டும் ஆணை யத்தின் பரிந்துரைகளை தவிர்க்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை. ஒருவேளை தவறினால்,ஆணையம் உயர் நீதிமன் றத்தை அணுகலாம். அதேபோல, ஆணையத்தின் உத்தரவுகளை எதிர்த்து அரசும் நீதிமன்றத்தை நாட முடியும். மனித உரிமை மீறல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப் பீட்டுத் தொகையை சட்டரீதியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தே வசூலிக்கலாம். இதுகுறித்து உரிய தாக்கீது பிறப்பித்து முடிவு செய்யலாம். அத்துடன்தவறு செய்யும் அதிகாரிகள் அல்லது அலுவலர்கள் மீது ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கலாம்.
எனவே, சட்டமியற்றும் அதிகாரம் படைத்த ஆட்சியாளர்கள், மனித உரி மைகள் ஆணையம் பிறப்பிக்கும் பரிந்து ரைகளை, அதன் நோக்கம் சிதையாமல் முழுமையாக அமல்படுத்தும் வகையில் தேவையான சட்ட திருத்தங்களை மேற் கொள்வது காலத்தின் கட்டாயம்.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிட்டு உள்ளனர்.