'விடுதலை'யின் நீண்ட கால வாசகர் தாம்பரம் பாலசுப்பிரமணியன் மறைவு

 கழகப் பொதுச்செயலாளர் மரியாதை

.தி.மு.கழக தாம்பரம் நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் மற்றும் அண்ணா வியாபாரிகள் சங்க தலைவரும், நீண்ட கால விடுதலை வாசகரும், பெரியார் கொள்கை பற்றாளருமான பால சுப்பிரமணியன் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

மறைவுத்தகவல் அறிந்து இன்று (24.2.2021) காலை 9 மணியளவில் அவரது உடலுக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தி அவர்தம் வாழ்விணையர், மகள் மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினார். தாம்பரம் மாவட்ட தலைவர் .முத்தையன், சென்னை மண்டல இளைஞரணி தலைவர் .இர.சிவசாமி, தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், தாம்பரம் நகர துணைச் செயலாளர் மா.குணசேகரன் மற்றும் பழக்கடை சங்கர் ஆகியோர் உடனிருந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

Comments