சாதனை படைக்கவும் சாகசம் புரியவும் வயது ஒரு தடையல்ல !

எவ்வித கருவிகளின் உதவியுமின்றி, துடுப்புப் படகில் தனியாக  அட்லாண்டிக் பெருங்கடலைப் படகில் தாண்டியிருக் கிறார் 70 வயது முதியவர்

ஃபிராங்க் ரோத்வெல் (Frank Rothwell) என்ற 70 வயது முதியவர் துடுப்பு படகு ஒன்றில் அட்லாண்டிக் கடலைக் கடந்து சாதனைசெய்துள்ளார்.

 இதன் மூலம் அட்லாண்டிக் கடலை துடுப்புப்படகில் தாண்டிய மிகவும் முதிய வயதுக்காரர் என்ற  உலகச் சாதனை படைத்துள்ளார். இவரது துடுப்புகள் கடந்த தொலைவு, 4,828 கிலோமீட்டர். எடுத்துக் கொண்ட நேரம், 56 நாள்கள், 2 மணி நேரம் 41 விநாடிகள்.

 மொரொக்கோவிற்கு அருகில் உள்ள ஸ்பெயினுக்குச் சொந்தமான கெனரி தீவில் டிசம்பர் 12 ஆம் தேதி புறப்பட்ட அவர் 56 நாள் 2 மணி நேரம் 41 வினாடிகள் படகில் கடந்து மத்திய அமெரிக்கத் தீவான ஆண் டிகுவா நாட்டில் உள்ள இங்கிலீஸ் துறை முகத்தில் கரை இறங்கினார்.

இது இவரது மூன்றாவது சாதனை ஆகும், 2007ஆம் ஆண்டு முதல் முதலாக குழந்தைகளுக்கான வலிப்பு நோய் ஆய்விற்காக நிதிதிரட்ட பயணத்தை மேற்கொண்டார், அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு தண்டுவட பாதிப்பு நோய்க்கான நிதி திரட்டவும் பயணம் மேற்கொண்டார்,  இம்முறை இவர்

பிரிட்டனில் நடைபெறும் Alzheimer's  எனப்படும் மறதி நோய் தொடர்பான ஆய்வுகளுக்காக இதன்மூலம் நிதி திரட்ட பயணம் மேற்கொண்டார்,  இவரது இந்த பயணத்தின் மூலம்  மில்லியன் டாலர் நிதி கிடைக்க உள்ளது.

Comments