திராவிட தொழிலாளர் கழகம் விரிவுப்படுத்தப்படும் தருமபுரி மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

தருமபுரி, பிப். 25- தருமபுரி  மண்டல திராவிடர்  கழக கலந்துரையாடல் கூட்டம் 13.-2.-2021 சனிக்கிழமை  காலை 11 மணியளவில்  ஊற்றங்கரை  வித்யா மந்திர்  பள்ளி  பயணியர்  மாளிகையில்  நடைபெற்ற. கலந்துரை யாடல் கூட்டத்தில்  நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்;                                   

தீர்மானம்  எண் 1.  விவசாயிகளின் வாழ்வுரிமையைப்  பறிக்கும்  மத்திய அரசின்  வேளாண்  சட்டத்தை  எதிர்த்து புதுடில்லியில்  தொடர்ந்து  நடைபெறும் போராட்டத்தில்  உயிர் நீத்த விவசாயிகளுக்கும்,  சாத்தூர் வெடி விபத்தில்  பலியான தொழிலா ளர்களுக்கும்  இக்கூட்டம் ஆழ்ந்த. இரங்கலை  தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2: கரோனா காலத்தில்  மக்கள்  வாழ்க்கை தலை கீழாக  புரட்டிப்  போட்டுள்ளது. இந்த நிலையில்  திராவிடர்  கழகப் பணிகளில்  தொய்வு  ஏற்படாத வகையில்  இணையவழியில்  விடுத லையை  நடத்தி  வாசகர்களின் எண் ணிக்கையயை  அதிகப்படுத்தி தொடர்ந்து   கொள்கை  பிரச்சாரத் தையும்,  அவசியமான பிரச்சினை களையும்,  மய்யப்படுத்தி போராட் டங்களை  நடத்தியும்  புதிய, புதிய   இயக்கம்   வெளியீடுகளை கொண்டு வரவும்  உலகளவிய அளவில் உலகத்  தலைவர்  தந்தை  பெரியார்தம் உயர்  எண்ணங்களை  பரப்பும் வகையில்  திராவிட பொழில்  என்ற காலாண்டு  ஆய்வு  இதழை  தமிழ், ஆங்கிலம்  இரு  மொழிகளில் கொண்டுவந்து  திரா விட   நாற்று   என்ற மின்னிதழை  தொடங்கும்  தொடக்கம் செய்து  சிறப்பான வகையில்  வழிகாட்டி வரும்  திராவிடர்  கழகத்  தலைவர் தமிழர்  தலைவர்  ஆசிரியர்  அவர்க ளின் இடையறா பணிகளையும், வழிகாட்டுதல்களையும்,  அப்படியே  ஏற்று  இயக்க ஏடுகளுக்கு   சந்தா  சேர்த்து  கழக அமைப்பு  பணிகளில் ஈடுபடுதல்,  இயக்க  பிரச்சாரப் பணியினை   தீவிரப்படுத்துதல்  முதலிய பணிகளில்  திட்டமிட்டு  செயலாற்று வது என  தருமபுரி  மண்டல  திரா விடர்  கழகம் தீர்மானிக்கிறது.                                                     

தீர்மானம் எண் 3:  இந்திய அரசமைப்புச்  சட்டத்தில்  அடிப்படை கொள்கையாக  வலியுறுத்தப்பட்ட மதச்சார்பின்மை,  சமூக நீதி ஆகிய வைகளுக்கு  எதிராகவும் ஒவ்வொரு  குடிமகனின்  அடிப்படைக் கடமை  என்று  இந்திய  அரசமைப்புச் சட்டம்  51(எச்)  பிரிவு  வலியுறுத்தியும் விஞ்ஞான  மனப்பான்மை  சீர்திருத்தம் இவற்றை  வளர்ப்பதற்கு  வளர்ப்பதற்கு மாறாக  மூடநம்பிக்கைகளுக்கு  எதி ராக மூட  நம்பிக்கைகளை  வளர்க்கும் பி.ஜே.பி.  தலைமையிலான  தேசிய ஜனநாயகக்  கூட்டணி  அரசின் பிற் போக்குத் தனங்களை கழகத் தலை வரின்  வழிகாட்டுதலின்படி பிரச்சார. திட்டங்களை  வகுத்து மூடநம்பிக் கைகளை  முறியடித்து   செயல்படுத்து வது   இக்காலகட்டத்தில் மிகவும்  இன்றியமையாத முதன்மையான  பணி  என்றும்  தருமபுரி மண்டல  திராவிடர்  கழகம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 4:    தமிழ்நாட்டில் இயங்கி  வரும்  என்.எல்.சி  நிறுவனம், ரயில்வே  துறை,  அஞ்சல்துறைகளில்  தமிழ்நாட்டைச்  சேர்ந்தவர்களுக்கு  இடம் கிடைக்காத  வகையில்  செயல் பட்டு வரும்  பெரும்பாலும்  வட நாட்டுக்காரர்களை  ஆதிக்கம்  செலுத்தும் வகையில்  செயல்பட்டு  வரும்  மத்திய அரசை   இக்கூட்டம்   வன்மையாக கண்டிக்கிறது.

தீர்மானம்எண் 5:  தமிழர்  தலைவர் ஆசிரியர்  கொடுத்திட்ட  திராவிடம் வெல்லும்  என்னும்  முழக்கம் பொது மக்கள்  மத்தியில்  பிரபலமாகும் வகை யில்  எத்திசை  நோக்கினும் இம்முழக் கம்  தென்படும் வகையில் எழுத்துப் பிரச்சாரத்திற்குமுன்னுரிமை கொடுக்குமாறு கழகத் தோழர்களை இக்  கலந்துரையாடல்  கூட்டம்   கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்  எண்  6:  தமிழர்  தலை வரின்  ஒப்புதலைப்  பெற்று  கிருஷ்ண கிரி  நகரில்  தந்தை பெரியார்  படிப்ப கம், தமிழர்  தலைவர்  கி. வீரமணி  நூலகம்  அமைக்கும் பணியினை  தொடங்குவது  என தீர்மானிக்கப்படு கிறது.

தீர்மானம் எண் 7:  திராவிட  தொழிலாளர் கழகத்தை  விரிவுபடுத் தும்  வகையில் அனைத்து  மாவட்டங் களிலும் ஒன்றியங்களிலும்  உருவாக் கிட   கழகப் பொறுப்பாளர்கள்  ஒத்து ழைக்குமாறு கூட்டம்  கேட்டுக்  கொள்கிறது.

புதிய  பொறுப்பாளர்கள்

தருமபுரி மாவட்ட தொழிலாளர் அணி புதிய பொறுப்பாளர்கள்:

தலைவர்: பெ.கோவிந்தராஜ், செய லாளர்: சி.காமராஜ், அமைப்பாளர்: .மாது, தர்மபுரி மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர்: இரா. சேட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட தொழிலாளர் அணி தலைவர்: சிவ.மனோகர், செய லாளர்: மா. சின்னராஜ், அமைப்பா ளர்: செ..மூர்த்தி,  காவேரிப்பட்டினம்  ஒன்றிய தலைவர்: பெ.செல்வம், செய லாளர்: பெ.செல்வேந்திரன்,   ஓசூர்  மாநகர திராவிடர் கழகத் தலைவர்: மு.கார்த்திக், மாநகர  செயலாளர்: மு.அக்பரிடி ஆகியோரை புதிய பொறுப்பாளர்களாக  திராவிடர்  கழகத் துணைத்  தலைவர்  கவிஞர் கலி.பூங்குன்றன்  அவர்களின் அனு மதியுடன் திராவிடர்  கழக  அமைப் பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் அறிவிப்பு செய்தார்.

 

Comments