திருச்சி நவல்பட்டு அண்ணாநகரில் முப்பெரும் விழா

தந்தை பெரியார் அரங்கத்தை கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் திறந்து வைத்தார்

 திருச்சி, பிப். 13- திருச்சி நவல்பட்டு அண்ணாநகரில்  தந்தை பெரியார் அரங்கம்  அறிமுக விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 88ஆவது பிறந்த நாள் விழா, ஜாதி மறுப்புத் திருமண இணையர்களின் குடும்ப சந்திப்பு ஆகிய முப்பெரும் விழா திருச்சி அண்ணாநகர், காவலர் குடியிருப்பு பகுதியில் பிப்.7 ஆம் தேதி நடைபெற்றது.  திருவெறும்பூர் ஒன் றிய செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் வரவேற்புரையாற்றினார். தி.தொ.. பெல் .ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாநில தொழிலாளரணி செயலாளர் மு.சேகர், மாவட்ட செயலாளர் இரா. மோகன்தாஸ், மண்டல மகளிரணி  செயலாளர் சோ.கிரேசி, திருவெறும் பூர் ஒன்றிய செயலாளர் .மாரியப் பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காவலர் குடியிருப்பு பகுதியில் திராவிடர் கழக நிகழ்ச்சிகள் மற்றும் சமூக சீர்திருத்த கருத்தரங்கங்கள் நடத்திட திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் இரா.தமிழ்ச்சுடர் தன் னுடைய இல்லத்தில் தன் சொந்த செலவில் கட்டியுள்ள  தந்தை பெரியார் அரங்கத்தை திராவிடர் கழ கத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் திறந்து வைத்து உரையாற் றுகையில்,

உழைப்பு, பொருள் அத்தனையை யும் அர்ப்பணித்து இந்த பகுதியிலே பெரியார் பெயரில் ஒரு அரங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் தமிழ்ச்சுடர் அவர்கள், அவரை தலைமைக் கழகத்தின் சார்பில் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். தந்தை பெரியாரு டைய கருத்துக்களை கொள்கைகளை பரப்ப வேண்டும் என்ற ஆர்வத்தோடு அவர் செய்கிற பணி மிகவும் சிறந்த பணியாகும் தமிழ் சுடர் அர்ப் பணிப்போடு செய்யகூடியவர். அவர் மேற்கொள்கிற பணி மிகவும் பாராட் டத்தக்கது.  அருமையாக தந்தை பெரி யார் பெயராலே  உருவாக்கியிருக்கிறார். இதை சரியான முறையில் பயன்படுத் திக் கொள்ள வேண்டிய பொறுப்பு கழக தோழர்களுக்கு இருக்கிறது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமாக ஒரு வேண்டுகோளை முன்வைக்கி றேன். இந்த அரங்கத்தை இலவசமாக பயன்படுத்தி கொள்ளுங்கள் எனக் கூறினார். எதையும் இலவசமாக  செய்யாதீர்கள்.  இனாம் என்று சொல் லாதீர்கள். அதுபோன்று பயன் படுத்திக் கொள்வதற்கு மக்கள் மத்தி யில் மதிப்பு இருக்காது என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவதுண்டு. ஒரு துண்டு அறிக்கை கொடுத்தால் கூட அதற்கு அஞ்சு பைசா வாங் கிக்கொண்டு கொடுங்கள் என்று கூறுவார். ஏனென்றால் அப்போது தான் அதற்கு மதிப்பு இருக்கும் இங்கு காலையிலிருந்து புரட்சிக்கர திரு மணங்கள் நடந்ததுள்ளது. மணமக் களை வாழ்த்துகிறேன். இங்கு நடப் பது எல்லாமே புரட்சிகரமானதுதான்.  மனிதன் என்றாலே பகுத்தறிவோடு சிந்திக்ககூடியவன். பகுத்தறிவு எதற்கு பயன்படவேண்டுமோ அதற்கு பயன் படவேண்டும். தந்தை பெரியாரின் அறிவு புரட்சி என்பது மிக மிகத் தேவை.  இந்த நாட்டில் ராமராஜ்ஜியத்தை உண்டாக்க போகிறோம் என்று கூறுகிறார்கள். ஒரு ராஜ்ஜியமும் இந்த பெரியார் மண்ணில் நடக்காது. இவ்வாறு பேசினார்.

ஜாதி மறுப்பு திருமண இணையர்களின் குடும்ப சந்திப்பு

உலக காதலர் தினத்தையொட்டி கடந்த நான்கு ஆண்டுகளாக ஜாதி மறுப்பு திருமண இணையர்களின் குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர்  தென் மொழிப் பாவலர் ஈகவரசன் மொழி வாழ்த்து பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஈரோட்டு பூகம்பம் கலைக் குழு சார்பில் புள்ளம்பாடி பொற் செழியன் இயக்கப் பாடல்களை பாடினார்.

ஆதலினால் காதல் செய்வீர் அறக்கட்டளை இயக்குநர் திருப்பூர் வழக்குரைஞர் குணசேகரன் பேசுகை யில்,  வயது வந்த ஆணும், பெண்ணும் மனதொருமித்து காதலித்து திரு மணம் செய்ய முயலும் போது, ஜாதி குறுக்கிடுவதையும், அதன் விளைவாக ஆணவக் கொலைகள் நடைபெறுவ தையும் சுட்டிக்காட்டி மனித நேயத் தின் அடிப்படையில் அவ்வாறு ஜாதி ஆணவக் கொலைகள் நடைபெறாமல் தடுத்து காதலர்களுக்கு பாதுகாப்ப ளித்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காகவே இந்த அறக் கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகம் போன்ற அமைப் புகள் காதலர்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்த போதிலும், இது போன்ற அமைப்புகளின் உதவியை நாடினால் பாதுகாப்புக் கிடைக்கும் என்பதை அறியாத இளைஞர்கள் ஜாதி ஆணவப் படுகொலைக்கு பலி யாகிறார்கள்.  அண்மையில் கரூரில் இதுபோன்ற ஆணவக் கொலை நடந்துள்ளது. எனவே ஜாதி, மதம் ஒழிய ஜாதி மறுப்பு திருமணமே தீர்வு என்ற அடிப்படையில் அறக்கட்டளை செயல்படுகிறது என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து ஜாதி மறுப் புத் திருமணம் செய்த இணையர்களின் குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற் றது. ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் சட்டத்தை எரித்து சிறை சென்ற பெருவளப்பூர் சிதம்பரம் மகன் வீரமணி தனது ஜாதி மறுப்பு திரு மணத்¬யும், தனது தந்தையாரின் திருமணத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பு களையும் எடுத்துரைத்தார். மேலும் மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி சுரேஷ் தனது ஜாதி மறுப்பு திருமணத்தில் ஏற்பட்ட அனுபவங் களையும், மகளிரணியைச் சேர்ந்த ரெஜினா பால்ராஜ், அவரது மருமக ளும் மகளிரணிப் பொறுப்பாளருமான ரூபியா ஆகியோர் தங்களது இணை யேற்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட இடை யூறுகளையும், திராவிடர் கழக தோழர்கள் உதவியால் திருமணம் நடந்தது குறித்தும் கூறினார்கள். வின்சென்ட் தனது ஜாதி, மத மறுப்பு திருமண அனுபவத்தையும், சர்மிளா என்பவர் மணிகண்டன் என்ற தனது துணைவர் இஸ்லாமியரான தனது பெற்றோரின் சம்மதத்தோடு தங்கள் திருமணம் நடைபெற்றதையும் பகிர்ந்து கொண்டனர். 

இந்நிகழ்வில் ஜாதி மறுப்பு திரு மணங்களை கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்  மற்றும் பெல் .ஆறுமுகம் ஆகியோர் நடத்தி வைத் தார். தொடர்ந்து சாந்தி சுரேஷ் இணையரின் மகன்கள் அன்புச் செல் வன், அறிவுச் செல்வன் ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், ஜாதி மறுப்பு திருமண இணையர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நிறைவாக மகளிர் பாசறை தலைவர் அம்பிகா கணேசன் நன்றி கூறிட நிகழ்வு மிகச் சிறப்பாக நடந் தேறியது.

Comments