கடலூர் வே.திருஞானம் இல்ல இணையேற்பு விழா

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஓட்டல் மகாராஜா ராதா மண்டபத்தில் 14.2.2021 அன்று கழகத்தோழர் வே.திருஞானம், காலம் சென்ற சங்கரி இவர்களின் மகன் பொறியாளர் கவியரசன் மற்றும் ஆத்தூரை சேர்ந்த காலம் சென்ற இராஜா - சாந்தி  இவர்களின் மகள் முனைவர் ஆர்.ராஜப்பிரியா ஆகியோரின் இணையேற்பு விழா திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் .அருள்மொழி தலைமையில் ஜாதி மறுத்து, தாலி இல்லாமல் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது. முன்னதாக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மணமகன் குடும்பம் மற்றும் மணமக்களை அறிமுகப்படுத்தி, பாராட்டி வாழ்த்தி பேசினார். மணவிழாவில் மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட செயலாளர் தென்.சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், புலவர் சு,.இராவணன், மா.மா..அமைப்பாளர் ரேவந்த் ஆண்டனி, மா...அமைப்பாளர் டிஜிட்டல் இராமநாதன், கடலூர் நகரத் தலைவர் .எழிலேந்தி, நகர செயலாளர் இரா.சின்னதுரை, நூலகர் மாதவன், ஆடிட்டர் சொ.குமரகுரு, மாணவர் கழக சி.எழிலரசு, புகழேந்தி மற்றும் மதிமுக அமைப்பு செயலாளர் .வந்தியதேவன், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் தமிழ்பொன்னி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மணமகன் கவியரசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.


Comments