இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்முறை: பாஜக மாவட்டத் தலைவர்மீது புகார்

போபால், பிப். 24 இளம்பெண்ணை கடத்தி தனது பண்ணை வீட்டில் வைத்து பாலியல்வன்கொடுமை செய்த ஜோத்பூர் பாஜக தலைவர் மீது காவல்துறையில் புகார் அளிக் கப்பட்டுள்ளது..

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாஹ்தோல் மாவட்டத்தில்  20 வயது இளம்பெண் ஒருவர் கடத்தப் பட்டு, பண்ணை வீட்டில் இரண்டு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்முறை செய்யப்பட்ட தாக புகார் எழுந்துள்ளது.

இந்தக் கொடூர நிகழ்வு குறித்து கூறிய அப்பெண்ணின் உறவினர் கள், பாதிக்கப்பட்ட பெண் உள்ளூர் பாஜக பிரமுகர் உள்பட 4 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு  உட் படுத்தப்பட்டதாக தெரிவித்து உள் ளனர். மளிகை பொருட்கள் வாங்கச் சென்ற அந்த பெண் கடத்தப் பட்டதாகவும் அவர்கள் கூறி உள் ளனர்.

வெளியில் சென்றவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் நீண்ட நேரம் தேடிப்பார்த்தனர். இந்த நிலையில் அவர்கள் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித் துள்ளனர். புகார் அளித்த நிலையில் சிலர் அப்பெண்ணை மயங்கிய நிலையில் அவரது வீட்டுக்கு அருகில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த நிகழ்வில் ஜெய்த்பூர் பாஜக தலைவர் விஜய் திரிபாதி, அவருடன் இருக்கும் 3 பேர் மீது பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து பெண்ணின் உறவினர் ஒருவர் கூறியதாவது: ”பாஜக தலைவரும் அவரது அடியாட்களும் கடைக்குச் சென்ற  பெண்ணை காரில் கடத்திச் சென்றனர், அதன் பிறகு ஊருக்கு அருகில் உள்ள பாஜக பிரமுகரின் பண்ணை வீட்டில் வைத்து பாலி யல்வன்கொடுமை செய்துள்ளனர். இந்த நிலையில் பெண்ணை காண வில்லை என்று கூறி நாங்கள் காவல்துறையில் புகார் அளித்தோம், இதை காவல்துறையினர் பாஜக பிரமுகருக்குத் தெரிவித்த உடன் அவர்கள் பெண்ணை மயங்கிய நிலையில் எங்கள் வீட்டிற்கு அருகில் வீசிவிட்டுச் சென்றுவிட்ட னர்என்று கூறி உள்ளனர். இந்த நிலையில் உள்ளூர் மக்கள் பாஜக பிரமுகர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

Comments