செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயன்பாட்டில் நிதி சேவை திட்டம்

சென்னை, பிப். 19-- சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்ய அறிமுகப்படுத்தியிருக்கும்ஸ்மார்ட் ஃபோலியோ' (Smart Folio) திட்டத்திற்கு செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தலோட்டஸ் ட்யூ' நிறுவனத்துடன் கைகோர்க்கிறது ஜியோ ஜித் (GEOJIT) நிதி சேவை நிறுவனம்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக - நீண்டகால முதலீட்டுக்கும், குறுகியகால பங்கு வணிகத்திற்கும் தேவைப்படும் பல்வேறு சேவைகளை நாங்கள் வழங்கி வருகிறோம். இதில் முதலீடு செய்பவர்க ளுக்கு குறித்த நேரத்தில் பரிந்துரைகள் கிடைத்துவிடுகின்றன. அதன் மூலம் தங்களிடமுள்ள பங்குகளின் பட்டியலை மாற்றியமைப்பதும், புதிதாக ஒன்றை உருவாக்குவதும் எளிதாகிறது.  இதற்காக பல ஆவணங்களில் கையொப்பமிட வேண்டும், குறைந்த பட்சமாக, குறிப் பிட்ட காலமாவது அந்தப் பங்குகளை கைவசம் வைத்திருக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் கூட இல்லை என ஜியோஜித் நிறுவன தலைமை டிஜிட்டல் அதிகாரி ஜோன்ஸ் ஜார்ஜ் தெரிவித்து உள்ளார்.

Comments