கோவில் பூனைகள் ஜாக்கிரதை
கோவில்
சொத்து விவரத்தை இணையத்தில் வெளியிடவேண்டும்: - உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஆமாம்,
கோவில் பூனைகள் ஏராளம் உண்டு. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அரசர் கிருஷ்ண தேவராயர் அளித்த வைர நகைகளைக் கூட அந்தப் பூனைகள் களவாடியதுண்டே!
‘சிம்ம
சொப்பனமோ?'
மதுரையில்
கலைஞர் சிலை திறப்புக்கு பா.ஜ.க.
எதிர்ப்பு.
தந்தை
பெரியார், கலைஞர் உள்ளிட்ட திராவிடர் தலைவர்களின் சிலைகள்கூட இந்த சங் பரிவார்க் கூட்டத்திற்குச் சிம்ம சொப்பனமாக இருக்கிறது.
பெருந்தன்மையாவது
- வெங்காயமாவது!
எதிர்ப்பவர்கள்கூட
ராமன் கோவிலுக்குப் பணம் தருகிறார்கள் : - மோகன் பாகவத், ஆர்.எஸ்.எஸ். தலைவர்.
பெருந்தன்மையும்,
அச்சமும் கலந்த கலவை இது. பெருந்தன்மை என்பதையெல்லாம் புரிந்துகொள்ளும் பெருந்தன்மை இதுகளுக்கு
ஏது?
கடவுளுக்குத்
தேவையா
நகை?
ஒடிசா
பூரி ஜெகநாதர் கோவிலுக்கு 4 கிலோ வெள்ளியில் ஆபரணங்கள் அளித்த பக்தர்.
கடவுளைத்
திருப்திபடுத்துவதற்கா?
அப்படியானால் கடவுள் ஆசாபாசம் உடையவரா?
வேண்டும்
சுயமரியாதை!
சென்னையில்
இன்று அய்.பி.எல். - கிரிக்கெட்
வீரர்கள் ஏலம்.
கிரிக்கெட்டே
மோசம் - இதில் ஆட்கள் ஏலம் விடப்படுவது அதைவிட மோசம் - ஆட்டக்காரர்களுக்கு சுயமரியாதை கிடையவே கிடையாதா? அவர்கள் என்ன ஏல சரக்குகளா?
சரணாகதி
படலம்!
மத்திய
அரசுக்குத் தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் : - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சரணாகதிக்கு
இப்படியொரு பெயரா?
‘கொள்ளை'
அடிக்க
வேண்டாமா?
பாசஞ்சர்
இரயில்களை உடனடியாக இயக்க மக்கள் கோரிக்கை.
அது
எப்படி? பாசஞ்சர் இரயிலில் இலாபம் கிடைக்காதே! சிறப்பு இரயில்கள் என்று முத்திரை குத்தி ‘கொள்ளை' அடிக்கவும் முடியாதே!
அதுவரை
மகிழ்ச்சியே!
வீட்டில்
தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப் பெட்டி இருந்தால் அவர்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழ் வரமாட்டார்கள்; ரேசன் அட்டை ரத்து : - கருநாடக பா.ஜ.க.
அரசு ஆணை.
இந்தப்
பொருள்கள் எல்லாம் அத்தியாவசியம் ஆகிய நிலையில், இதனை வறுமைக்கோட்டுக்கான அளவுகோலாகக் கொள்ள முடியுமா? மூன்று வேளையும் சாப்பிடுபவர்களுக்குச் சலுகைகள் ரத்து என்று சொல்லாமல் விட்டார்களே, அதுவரை மகிழ்ச்சியே!
எது
செய்தி?
இன்றும்
8 ஆம் முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு.
என்றைக்கு
உயரவில்லை என்பது மட்டும்தான் செய்தியாக இருக்க முடியும்.
மக்களின்
தலைவர் ஸ்டாலின்
23 நிகழ்ச்சிகளில்
தி.மு.க. தலைவர்
மு.க.ஸ்டாலின் வாங்கிய
மனுக்களின் எண்ணிக்கை எட்டரை லட்சம்.
மக்களோடு
மக்களாக தளபதி மு.க.ஸ்டாலின்
இருக்கிறார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டே!
விழித்தால்
விபரீதம்!
தமிழ்நாடே
மதுவில் மூழ்கியுள்ளது : -சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில்...
மக்கள்
மயக்க நிலையில் இருந்தால்தானே மாநில அ.தி.மு.க. அரசுக்கு இலாபம்.
விழித்தெழுந்தால் விபரீதம் தானே ஆட்சியாளர்களுக்கு!
கோவில்கள்,
கடவுள்கள் தோன்றியது எப்படி?
நடிகை
நிதி அகர்வாலுக்கு ரசிகர்கள் கோவில் கட்டி கும்பாபிஷேகமும் செய்தனர்.
கோவில்களும்,
கடவுள்களும் எ(இ)ப்படித்தான்
தோன்றின - சிந்திக்கவும்!
அலட்சியம்
வேண்டாம்!
நாள்தோறும்
6 விழுக்காடு தடுப்பூசிகள் வீணாகின்றன.
அலட்சியமா?
தொழில் நுணுக்கப் பிரச்சினையா? அலட்சியப்படுத்தாமல் கவனம் செலுத்துக!