ஆசிரியருக்குக் கடிதம் - அண்ணாவின் ஒப்பற்ற சாதனைகள்!

அண்ணா 1.3.1967இல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். தமிழக மக்கள் துன்பக்கடலில் மூழ்க 2.2.1969இல் நம்மை விட்டு பிரிந்தார். ஆனால் இந்த இரண்டு ஆண்டுக்கும் சில நாட்கள் குறைவாக முதலமைச்சராக இருந்த அண்ணாவின் சாதனைகள்:

1) சுயமரியாதை திருமணங்கள் சட்ட உரிமை

2) தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிக் கொள்கை

3) 14.4.1967இல் சென்னை மாகாணத்திற்குதமிழ்நாடுஎன்று பெயரிட்டு பெருமை சேர்த்தார்.

இந்த மூன்று தீர்மானங்களும் என்றென்றும் அண்ணாவின் பெயரை ஒலித்துக் கொண்டே இருக்கும்.

தமிழக சட்டசபையில்தமிழ்நாடுதீர்மானத்தை ஒரு மனதாக இயற்றியபின் தீர்மானத்தின் நகலை மரியாதை நிமித்தம் இராசாசிக்கும் அனுப்பப்பட்டது. குல்லுகப்பட்டர் இராசாசிதமிழ்நாடுஎன்பதைதமிழ்நாட்என்று மாற்றச் சொன்னார். இதுதான் இராசாசியின் பார்ப்பன குசும்பு. ஆனால் சட்டமன்ற உறுப்பினர்கள் அதை ஏற்கவில்லை. “தமிழ்நாடுஎன்ற பெயர்தான் நிலைத்தது.

- பெரியார் திறலோன், புதுச்சேரி

Comments