நீர்நிலைகளை பாதுகாப்பது அதிகாரிகளின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை,பிப்.13- சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில், ஆக்கிரமிப்புகளால் காணாமல் போன 27 நீர்நிலைகளை கண்டுபிடித்து பாதுகாக்க கோரி அப்பகுதியை சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை  நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சென்னையைச் சுற்றி இருந்த பல நீர்நிலைகள் காணாமல் போயுள்ளன. நீர்நிலைகள் வாழ்வாதாரத்துக்கு நுரையீரலைப் போல முக்கியமானது என்பதை உணர்ந்து மாநகராட்சியின் அனைத்து அதிகாரிகளும், அவற்றை பாதுகாக்க வேண்டும். சென்னை மாநகராட்சி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலைகளை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க வேண்டியது மாநில அரசு, மாநகராட்சி அதிகாரிகளின் கடமை.

அதேபோல, அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அரசு நிலங்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் விவகாரத்தில் அரசியல் உள்ளிட்ட எந்த காரணங்களுக்கும் இடம் கொடுத்து விடக் கூடாது. காணாமல் போன நீர்நிலைகளை மீட்க மனுதாரர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரலாம்.  உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, இந்த உத்தரவை தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.

 

தமிழகத்தில்  புதிதாக 483 பேருக்கு

கரோனா தொற்று உறுதி

சென்னை, பிப்.13- தமிழகத் தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரு கிறது. சுகாதாரத்துறை அமைச் சகம் நேற்று (12.2.2021) வெளி யிட்ட தகவலின்படி, தமிழகத்தில்  புதிதாக 483 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8லட்சத்து 44ஆயிரத்து 173 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 6 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 12ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 486 பேர் கரோனா சிகிச்சை பெற்று குண மடைந்தனர்.  இதனால் தமிழகத்தில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8லட்சத்து 27ஆயிரத்து 480 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 4ஆயிரத்து 285பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  சென்னையில் நேற்று மேலும் 142 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 341 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.

Comments