வல்லம்,
பிப். 21-- பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் மாணவர்களின்
நலன் பிரிவு மற்றும் அய்க்யூஏசி இணைந்து நடத்திய நடத்தை விதிகளின் விழிப்புணர்வு கூட்டம் 16.02.2021 அன்று முதலாம்
ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாணவர்கள்
நலன் பிரிவு இயக்குநர் மற்றும்
பேராசிரியர் முனைவர் எஸ்.பி.கே.பாபு
வரவேற்புரை நிகழ்த்தினார். கல்வி
முதன்மையர் பி.கே.சிறீவித்யா
மாணவர்களுக்கு பல்கலைக் கழகத் தின் நடத்தை விதிகள் மற்றும் தேர்வு முறைகள் பற்றியும் விரிவாக
எடுத்துக் கூறினார்.
கூட்டத்தில்
இணை துணை வேந்தர் முனைவர்
எஸ்.தேவ தாஸ் மாணவர்கள் கடைப் பிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் பற்றியும் நெறிமுறைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
பல்கலைக்கழகத்தின்
துணைவேந் தர் முனைவர் எஸ்.வேலு சாமி கூறும் போது மாணவர்கள் அனைவரும் தங்களது அறிவைக் கொண்டு சிந்தித்து சமத்துவ நோக்கத்துடன்
சமுதாயத்தில் செயல் பட வேண்டும் என்று
கேட்டுக்கொண் டார்.
பொறியியல் துறை முதன்மையர்
பேராசிரியர் முனைவர் எஸ்.செந் தமிழ் குமார் நன்றியுரை வழங்கி னார். நிகழ்ச்சியில் துறை
தலை வர்கள், பேராசிரியர்கள்
மற்றும் மாணவர்கள் பங்கேற்று சிறப்பித் தார்கள். மாணவர்களின் நலன் பிரிவு இயக்குநர் கூட்டத்திற்கான
ஏற்பாடு களை செய்திருந்தார்
என்பது குறிப் பிடத்தக்கது.