செய்தியும், சிந்தனையும்....!

அவன் செயல்தானோ!

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 39 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்.

2013 இல்இதே மாநிலத்தில் கடும் வெள்ளத்தால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரிதாபமாக மாண்டனர். கோவில்கள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன.

இவையெல்லாம் அவன் செயல் என்று சொல்லப் போகிறார்களோ?

சொந்த புத்தி இல்லையா?

வேளாண் சட்டங்கள் - முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் சொன்னதைத்தான் நாங்கள் செய்கிறோம் : - பிரதமர் மோடி

 மன்மோகன்சிங்  சொன்னதை எல்லாம் - சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொண்டுதான் செயல்படுகிறதா மத்திய பி.ஜே.பி. அரசு?

நீதிமன்றம்தான் தீர்வா?

அண்ணா பல்கலைக் கழகத்தில் ரத்து செய்யப்பட்ட எம்.டெக். பயோடெக்னாலஜி, எம்.டெக். கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு படிப்புகளும் இட ஒதுக்கீட்டைக் காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டன. இந்த இரு பட்டப் படிப்புகளும் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக் கழகம் உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல்.

தமிழ்நாட்டில்தானே அதன் ஆளுகையின்கீழ்தானே அண்ணா பல்கலைக் கழகம் இயங்குகிறது. இதில் இட ஒதுக்கீட்டுக்கு குழப்பம் எங்கே வந்தது? மற்ற பாடத் திட்டங்களுக்குப் பின்பற்றப்படும் அதே விழுக்காட்டைப் பின்பற்ற என்ன தயக்கம்?

விளக்கம்

தேவையில்லை

தமிழ்நாட்டில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் தாக்கீது.

நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் தீர்மானித்து, குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெற்று அரசமைப்புச் சட்டம் 9 ஆம் அட்டவணையில் பாதுகாக்கப்பட்ட 76 ஆவது சட்டத் திருத்தத்துக்கு மீண்டும் மத்திய அரசைக் கேட்க வேண்டிய நிலை என்ன?

வேல்' நாடகம்!

தி.மு..வின் வேல் நாடகத்துக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் : - பா... மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி.

ஆக, வேல் தூக்குவது என்பது ஒரு நாடகமே என்று எப்படியோ பா... ஒப்புக்கொண்டு விட்டது.

கைவிடுவார்களா?

அயோத்தியில் ராமன் கோவில் கட்ட கிறித்தவர்களும், முஸ்லிம்களும் நிதி உதவி.

சிறுபான்மையினர்மீதான மூர்க்கத்தன எதிர்ப்பை இதன்மூலமாவது பா... - சங் பரிவார்கள் எதிர்ப்பையும், வெறுப்பையும் கைவிட்டால் சரி.

அவர்களுக்கு இந்த எதிர்ப்பும், வெறுப்பும்தானே மூலதனம் என்கிறீர்களா?

பழனி கோவில் பிரசாதம் - எச்சரிக்கை!

பணம் அனுப்பினால் அஞ்சல்மூலம் பழனி கோவில் பிரசாதம் வீடு தேடி வரும்.

கோவில் என்பது ஒரு வியாபாரக் கடை. பக்தி ஒரு பிசினஸ் (சங்கராச்சாரியார் கூற்று) என்பது விளங்கிடவில்லையா?

ஆமாம்... இந்தக் கரோனா காலத்தில் பழனி கோவில் பிரசாதத்தின் உண்மைத் தன்மை என்ன? அரசு அனுமதிக்கிறதா? மருத்துவத் துறை என்ன செய்கிறது?

வாழ்க ஜனநாயகம்!'

நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராகப் பேசப்படுவதெல்லாம் அவைக் குறிப்பில் பதிவாவதில்லை : - திருச்சி சிவா எம்.பி.,

வாழ்கஜனநாயகம்!'

Comments