ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     மாஉணவகத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா துவக்கியுள்ளார். சோறு, பருப்பு, காய்கறி மற்றும் முட்டை உள்ளிட்ட உணவை ரூ.5-க்கு ஏழைகளுக்கு கிடைக்கும் வகையில் இந்த உணவகம் இருக்கும் என அறிவித்துள்ளார்.

·     மண்டல் வழக்கில் உச்ச நீதிமன்ற ஒன்பது நீதிபதிகளில் ஒருவராக இருந்து சமூக நீதிக்கான ஆதரவை நல்கிய நீதிபதி பி.பி. சாவண்ட் தனது 91ஆவது வயதில் புனேவில் இயற்கை எய்தினார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     அண்ணா பல்கலைக்கழக எம்.டெக் படிப்பு நிறுத்தம் தொடர்பான வழக்கில், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மாநில பல்கலைக்கழகங்களில் திணிக்க முற்படுகிறதா? என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

·     புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட பல்வேறு குழுக்களின் உறுப்பினர்கள் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் திஷா ரவியை கைது செய்ததைக் கண்டித்து, அவரை உடனடியாக விடுவிக்கக் கோரி பெங்களுரூவில் போராட்டம் நடத்தினர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

·     அரசுடமையாக்கப்பட்ட பாங்க் ஆப் மகாராஷ்ட்டிரா, பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென் ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகிய நான்கு வங்கிகளை தனியார்மயமாக்கமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்.

தி டெலிகிராப்:

·     அரசியலமைப்பு (பட்டியல் ஜாதிகள்) ஆணை, 1950 இன் பாரா 3-ன்படி,  இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தாழ்த்தப்பட்டவர்கள், கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சலுகைகளைப் பெற முடியாது மற்றும் தனித் தொகுதிகளிலும் நிற்க முடியாது என மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

·     அமலாக்க இயக்குநரக தற்போதைய இயக்குநர் சஞ்சய் குமாருக்கு  ஓராண்டு கால நீட்டிப்பை மத்திய அரசு தந்தது சட்ட விரோதம் என்ற வழக்கு தொடர்பாக மத்திய அரசு, மத்திய விஜிலென்ஸ் கமிஷன், அமலாக்க இயக்குநரகம் மற்றும் அதன் தற்போதைய இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ரா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியது.

- குடந்தை கருணா

16.2.2021

Comments