வேளாண் சட்டங்கள் - தமிழக மீனவர்கள் - கேந்திரிய வித்யாலயா பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி குறிப்பிடாததற்கு எதிர்ப்பு!

மக்களவையில் தி.மு.கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு

புதுடில்லி, பிப். 11 - பிரதமர் மோடி தனது உரையில் தமி ழக மீனவர்கள் பிரச்சினை தொடர்பாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறு வது தொடர்பாகவும் எது வும் குறிப்பிடாததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் தி.மு.கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் கழக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்று கூறியதுடன் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக மக்களவையில் பிரதமர் மோடி பேசியதற்கு தி.மு.., காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் முடிவில் பிரதமர் மோடி பதிலளித்து பேசினார்.

அப்போது புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் உரிமைகளும் பறிக்கப்படவில்லை என்றும், இது யாருக்கும் எதிரான சட்டம் இல்லை என்றும் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் முழக்கமிட்டு எதிர்ப்பை பதிவு செய்த காங்கிரஸ் உறுப்பினர்கள், பிரதமர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து, வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவது குறித்து பிரதமர் மோடி தனது உரையில் எதுவும் தெரிவிக்காததை எதிர்த்து. அவரது உரை முடிந்ததும், மக்களவை தி.மு.. குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் தி.மு.. உறுப்பினர் களும் வெளிநடப்பு செய்தனர்.

பிரதமர் மோடி பேசியவுடன், தி.மு.. சார்பில் பேச எழுந்த டி.ஆர். பாலு அவர்களுக்கு முழுமையாக பேச அனுமதி அளிக்கவில்லை. அவர் பேச முற்படும்போதெல்லாம், அமைச்சர்களும், ஆளும் பா... உறுப்பினர் களும் அடிக்கடி குறுக்கிட்டனர். வேளாண் சட்டங்கள் குறித்தும் அதனால் விவசாயிகள் படும் இன்னல்கள் குறித்தும் பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிடாதது கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் இல்லாத தும் போதிய தமிழாசிரியர்கள் இல்லாததும், இது குறித்து பிரதமர் மோடி தேவையான கவனம் செலுத்த வில்லை .

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப் படுவதும், மீன்களை அள்ளிச் செல்வதையும் மீனவர்கள் படகுகளை உடைத்து நாசம் செய்வதையும் கண்டித்து மோடி ஒன்றுமே குறிப்பிடவில்லை என்று டி.ஆர். பாலு குறிப்பிட்டு வருகையில் - அவருக்கு தொடர்ந்து பேச அனுமதிக்க வில்லை .இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.கழக உறுப் பினர்கள் மக்களவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Comments