நாட்டுமாடு பற்றிய பாடத் திட்டத்தில் கட்டுக்கதைகள்

அறிவியலாளர்கள் எதிர்ப்பால் ஆங்கிலப் பதிப்பிலிருந்த பகுதிகளை மட்டும் நீக்கிய மோடி அரசு....

புதுடில்லி, பிப்.19 மத்திய பாஜக அரசு, தனது பால் மற்றும்  கால்நடைத்துறை அமைச்சகம் சார்பில்ராஷ்ட்ரிய காம தேனு ஆயோக்என்றதேசிய பசு ஆணையத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, நாட்டு மாடுகளை பாதுகாக்கப் போகிறோம் என்று சில திட்டங்களையும் அறிவித்துள்ளது.இதன் முதற்கட்டமாக நாட்டுமாடுகள் குறித்து, இளைய சமுதா யத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பிப்ரவரி 25 அன்று நாடு தழுவிய பசு அறிவியல் தேர்வை அறிவித்து, அண்மையில் அதற் கான பாடத்திட்டத்தையும் வெளியிட் டது. அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாண வர்கள், பள்ளி மாணவர்கள் மட்டுமன்றி, விரும்பினால் மாணவர்கள் அல்லாத பிறரும் இந்ததேர்வை எழுதலாம் என அறிவித்து, பணிகளை தீவிரமாக மேற் கொண்டு வந்தது. இந்நிலையில், பசு அறிவியல் தேர்வுக்கான பாடத்திட்டத் தில், கட்டுக்கதைகள் இடம்பெற்றுள்ளதாக அறிவியலாளர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பையடுத்து, அந்த பகுதிகளை சத்தமில்லாமல் நீக்கியுள்ளது.

குறிப்பாக ஆங்கில மொழிப் பாடத்திட்டத்தில் மட்டுமே இதைச் செய்துள்ளது.

இந்தியா மற்றும் ரஷ்யாவில் உள்ள அணுஆராய்ச்சி மய்யங்களில் கதிர்வீச்சு களைகட்டுப்படுத்த மாட்டுச் சாணம் பயன்படுத்தப்படுவதாகவும், எரிவாயுக் கசிவு விபத்தால் பாதிக்கப்பட்ட போபால் பகுதி மக்களை பாதுகாக்கவும்கூட மாட் டுச் சாணமே பயன்படுவதாகவும் மோடி அரசின் பாடத்திட்டத்தில் கூறப்பட்டு இருந்தது. மேலும், “பசுவை வதைப்பதற் கும், நிலநடுக்கத்திற்கும் தொடர்பும் இருக்கிறது; ஜெர்சி மாடுகள் தரம் குறைந்த பாலை தருகின்றன; நாட்டு மாடுகள் தரமான பாலை தருவதாலேயே அது மஞ்சள் நிறத்தில் இருக்கிறது; நாட்டு மாடுகள் கறக்கும் பாலில் தங்கம் கலந்திருப்பதற்கான தடயமே இந்தமஞ்சள் நிறம்'' என்றெல்லாம் தெரிவிக்கப் பட்டு இருந்தது.

அவசர அவசரமாக....

ஆனால், இதனைப் படித்தவர்கள், நாட்டுமாடு பற்றி பாடத்திட்டத்தில் கூறப்பட்டிருப்பவை அனைத்தும், அறிவி யல் ஆதாரமற்ற கருத்துகள்.. கட்டுக் கதைகள்... என்று எதிர்ப்புக் குரல் எழுப் பியுள்ளனர்.  இந்த மோசடிக் கதைகளுக்கு ஒரு தேர்வா? என்றும் கேள்வி எழுப் பியுள்ளனர். ஆங்கிலவழி பாடத்திட்டத் தைப் படித்துப் பார்த்தவர்களே பெரும் பாலும் மோடி அரசின் இந்த தவறு களைக் கண்டுபிடித்துள்ளனர். இதை யடுத்து, தங்களின் கட்டுக்கதைகளால் உலகளாவிய அளவில் அசிங்கப்பட நேரி டுமோ? என்று கருதிய மோடி அரசு, அவசர அவசரமாக ஆங்கில மொழியில் வெளியிடப்பட்ட பாடத் திட்டத்தில் மட்டும் மேற்கண்ட கட்டுக்கதைகளை நீக்கியுள்ளது.

ஆங்கிலத்தில் 3 பிரிவுகளாக புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டு உள் ளது. முதல் பிரிவில் பசுவானது தூய்மை, யதார்த்தத்தை பிரதிபலிப்பதாகவும், அதன்முகம் அப்பாவித்தனத்தையும், கண்கள் அமைதியையும், காதுகள் புத்திக் கூர்மையையும் எடுத்துக்காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

எனினும், தமிழ், மலை யாளம் உள்ளிட்ட பல்வேறு மண்டல மொழி களில் வெளியான, நாட்டுமாடுகள் தொடர்பான பாடத்திட்டத்தில், மோடி அரசின் கட்டுக்கதைகள் இப்போதும் அப்படியே இருக்கின்றன. மாணவர்களும் இதைப் படித்துத்தான் பசு அறிவியல் என்ற பெயரில், பிப்ரவரி 25 அன்று தேர்வு எழுதப் போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments