ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·     அமைதியான எதிர்ப்பு, பேச்சுரிமை, தடையற்ற இணைய சேவை இவை அனைத்தும் வாழும் ஜன நாயகத்திற்கு சான்று என ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு கூறியிருப்பதை மோடி அரசு உதாசீனப்படுத்த முடியாது என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

·     கரோனா காரணமாக மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் குடிமைப் பணித் தேர்வை எழுத முடியாதோர்க்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கலாம் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

·     தடையை மீறி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் .பியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

·     மத்திய அரசின் நிதியில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட் பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு முறையாக அளிக்கப்படவில்லை என மாணவர் கூட்டமைப்பு மத்திய அரசைக் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     மத்திய அரசுத் துறைகளில் மூன்று இணை செயலாளர்கள் மற்றும் 27 இயக்குநர் பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்ந் தெடுக்க தனியார் துறை உள்ளிட்ட துறைகளில் அனுபவம் உள்ளவர் கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த  நேரடி நியமனங்களில் இட ஒதுக்கீடு பின்பற்றுவது கிடையாது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     விவசாயிகள் மேற்கொண்டுள்ள போராட்டத்தில் அரசும் விவசாயிகளும் வன்முறை ஏதுமின்றி கட்டுப்பாட்டுடன் இருக்க அய்க்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

·     தேசிய பசுமை தீர்ப்பாணையத்தின் நிபுணர் குழு உறுப்பினராக உரிய அனுபவம் இல்லாத தமிழ் நாடு அரசின் மேனாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதனை நியமனம் செய்ததை ரத்து செய்யக் கோரி பூவுலகின் நண்பர்கள் குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தி டெலிகிராப்:

·     வேளாண் சட்டங்களில் எந்த குறைபாடும் இல்லை. எதிர்க் கட்சிகள் வேண்டுமென்றே எதிர்க்கின்றன என்ற மத்திய விவசாய அமைச்சர் தோமரின் குற்றச்சாட்டுக்கு அப்படி என்றால், விவசாய அமைப்புகளுடனான பேச்சு வார்த்தையில் வேளாண் சட்டங்களில் 18 திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வரத் தயார் என அறிவித்தது ஏன்? என காங்கிரஸ் கட்சி பதிலடி தந்துள்ளது.

- குடந்தை கருணா

6.2.2021

Comments