அரிமா நோக்கு - அந்தணர் யோக்கியதை

சு.அறிவுக்கரசு


 அந்தணர் என்போர் அறவோர் எவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழு கலான் - என்பது குறள்.

கல்மனப் பார்ப்பானைப் படைத்துக் காகத்தையும் ஏன் படைத்தாய்? என்று கேள்வி கேட்கும் வகையில் அமைந் துள்ள பார்ப்பனர்கள் அந்தணர் எனும் வகைப்பாட்டில் புகுந்துகொண்டு, அரும்பணியாற்றியவர்கள் எனும் தற்பெருமை பேசி, நூல் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பார்ப்பனர் நுழைந்த வீடோ, தெருவோ, ஊரோ தீட்டுப்பட்டு விட்டது எனும் கருத்தில் மாட்டு சாணியைக் கொண்டு தூய்மைப்படுத்தினர் என்றெல்லாம் செய்திகள் உண்டு. படிநிலை ஜாதிப் படிக்கட்டில் உச்சத்தில் உட்கார்ந்துகொண்டு, மற்றையோர் எல்லாம் தனக்கு கீழ் என ஆக்கி ஆதிக்கம் செலுத்தி வருவோர். பார்ப்பனர் அல்லாத ஜாதிக்காரர்களை கொலு பொம்மைகள் போலப் பல படிக்கட்டுகளில் நிறுத்தி, ஒவ்வொருவரும் தமக்குக் கீழே பார்த்து, அந்த ஜாதிகளை விட தங்கள் ஜாதி உயர்ந்தது என்று பெருமைப்படும் நிலையை ஏற்படுத்தி விட்டனர். எந்த ஜாதியானும் மேலே பார்க்கவிடாமல், பார்ப்பனர் உச்சத்தில் வீற்றிருப்பதைக் கவனிக்க விடாமல், கீழேயே பார்த்துத் திருப்தி அடைந்து தன் மேலாதிக்கம் குறையாமல் பார்த்துக்கொண்ட கள்ள மனத்தினர். இதற்கான சான்றுகள் நூற்றாண்டுகளாகத் தமிழ்நாட்டில் உள்ளன. என்றாலும் பிரிட்டிஷார் ஆண்டபோது நிறைய சான்றுகள் பட்டுள்ளன.

ஆண்டு 1919இல் ஆங்கிலேயர் ஆணையிட்ட மான் டேகு செம்ஸ்போர்ட் (சீர்திருத்தம்) ரெகுலேஷன் படி, சென்னை மாகாணத்தில் தேர்தல் நடந்தது. பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். (இருப்பதைக் கெடுப்பது, உரிமைகளை பிடுங்கிக் கொள்வது போன்றவை, இன்றைய இந்திய அரசால் சீர்த்திருத்தம் என்று சொல்லப்படுவதால் அந்தச் சொல்லைத்தவிர்க்கிறேன். இங்கிலீஷ் சொல்லைப் பயன்படுத்துகிறேன்) இரட்டையாட்சி 1920 முதல் நடை பெற்றது. கல்வி, உள்ளாட்சி போன்ற துறைகள் தேர்ந்தெடுக் கப்பட்ட அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டன. முதலமைச்சர் ஒருவரும் இருந்தார். இந்த ரெகுலேஷன்படி நடந்த தேர்தலில் பெரும் வெற்றியை பெற்று, நீதிக்கட்சி ஆட்சி, கடலூர், அகரம் சுப்புராயலு ரெட்டியார் தலைமை யில் சென்னை மாகாணத்தை ஆண்டது எனும் வரலாறு நாம் அறிந்ததே. இந்த ரெகுலேஷன் பிறப்பிப்பதற்காக ஆங் கிலேயர் அரசு நியமித்த குழு தன் அறிக்கை விவரங் களைத் தெரிவித்தது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரசு கட்சி ஏற்கவில்லை. அதைச் சார்ந்த (பார்ப்பனர் அல்லாத பிரிவினரும்) சென்னை மாகாண சங்கமும் ஏற்கவில்லை. நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்தி யர் நல உரிமைச் சங்கமும் எதிர்த்தது. ஏடுகள் எதிர்த்தன. தனிநபர்களான பொது வாழ்க்கைப் பிரமுகர்களும் எதிர்த் தனர். அத்தகைய எழுத்துக்களில் பார்ப்பனர் எதிர்ப்பு நிறைய இருந்தது.

பிரிட்டிஷ் இந்திய வரலாறுஎனும் நூலில் (பக்கம் 186) ஜேம்ஸ் மில் என்பவரும்இந்திய சிப்பாய்ச் சண்டை வரலாறுஎனும் நூலில் (பக்கம் 180) சர்.ஜான் கேயி என்ப வரும் பார்ப்பனர்களின் குணங்களைப் பற்றி எழுதியுள்ள னர். 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதப்பட்ட இந்நூல்களில், பார்ப்பனர்கள் தந்திரக்காரர் கள் என்றும், நம்பக்கூடாதவர்கள் என்றும் பிரிட்டிஷார் செயல்படுத்த முனைந்த சமூக சீர்திருத்தச் செயல்களை எதிர்த்தவர்கள் என்றும் கடுமையாகக் குறை கூறி எழுதப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் அரசுக்கு விரோதமாகச் செயல்பட்டது பார்ப் பனியம் என்று டைம்ஸ் ஏட்டின் நிருபர் வேலன்டைன் சிலோல் என்பவர் 1918இல் எழுதி அனுப்பினார். மேலைக் கல்வி கற்றிருந்த சித்பவன் பார்ப்பனர்களில் கோகலே போன்ற நல்லவர்களும், அவரைக் கடுமையாக எதிர்த்த பாலகங்காதர திலக் போன்றவர்களும் இருந்ததை அவர் கள் மேற்கோள் காட்டினர். பிரிட்டிஷார் ஆட்சியில்தான் பஞ்சமர்கள் ஓரளவு நன்மை அடைய முடியும் என்பதால் அதனைத் தடுக்கவும் பார்ப்பனர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிடவும் திட்டமிட்டு பெசன்ட் அம்மையாரின் ஆள்கள் இருக்கின்றனர் என்றே கூறினார் சைடன் ஹோம் பிரபு. இவர் பம்பாய் கவர்னராக இருந்தவர். ரெவரென்ட் ஜான் ஷராக் என்பவர் பார்ப்பனர்கள், ஆரியக் கடவுள் களின் பெயர்களை திராவிடர்கள் வணங்கவும், பார்ப்பனர் கள் படைப்பிலேயே உயர்ந்தவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளவும் வேண்டுமென எதிர்பார்ப்பவர்கள் என்று எழுதினார். (இந்திய சீர்திருத்தத்தில் ஜாதியின் பங்கு எனும் கட்டுரை - ஏசியாட்டிக் ரிவ்யூ - ஜூலை 1919,  பக்கம் 406) மேலைக்கல்வி கற்றிருந்தும் இவர்கள் சமத்துவத்தை ஏற்காதவர்கள் என்றும் ஆனால் எதிர்கால இந்தியா சூத்திரர் எனப்படும் பெரும்பான்மை மக்களையே நம்பியுள்ளது என்றும் சொன்னார்.

நீதிக்கட்சியின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவரும் அமைச்சராக இருந்தவருமான சர்.கே.வி.ரெட்டி நாயுடு அவர்கள். “அநீதியான மதச் சட்டங்களால் பார்ப்பனரல்லா தார், பல்லாண்டுகளாக, வெறுப்பூட்டும் பார்ப்பனச் சட்ட திட்டங்களால் திருமணம், சுவீகாரம், வாரிசுரிமை போன்ற வற்றில் கொடுமைப்படுத்தப்பட்ட நிலை மாற்றப்பட்டு அனைவரும் சமம் என்று ஆக்கப்பட வேண்டும்; தீண்டா மைக் கொடுமை முற்றிலும் நீக்கப்பட வேண்டும்என்று நாகப்பட்டினத்தில் பேசினார். “பார்ப்பனர்களைப் போலவே சமவாய்ப்பும் உரிமைகளும் பார்ப்பனரல்லா தார்க்கு தரப்பட வேண்டும் என்று கேட்பது குற்றமென்று கருதப்பட்டால், நாம் குற்றவாளிகளே என்று பார்ப்பனரின் போக்கை எள்ளி நகையாடினார் டாக்டர் நாயர். (ஜஸ்டிஸ் 2.6.1917)

ஆங்கிலேயர் ஆட்சியில் 1851இல் (சிப்பாய் கலகத்திற்கு ஆறு ஆண்டுகள் முன்பாகவே) வருவாய் வாரிய நிலை ஆணை எண் 128(2) பிறப்பிக்கப்பட்டது. அதன்படி வரு வாய்த்துறை பதவிகளில் மாவட்டத்தின் எல்லா ஜாதிகளுக் கும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று ஆணை யிடப்பட்டது. எங்கும் பார்ப்பனர்களே நிரம்பியிருந்த நிலையில் சமூக நீதிக் கண்ணோட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட ஆணை!

இதைத் தாங்கிக் கொள்ளாத பார்ப்பனர் வி.கே.ராமா னுஜ ஆச்சாரியார் எனும் எம்.எல்..சி 1918ஆம் ஆண்டில் இந்த ஆணை பார்ப்பனர்கள் மீது வெறுப்புக் காட்டி அவர்களுக்கு எதிராக உள்ளது எனக்கூறி தீர்மானம் கொடுத்தார். விவாதத்திற்கு வந்தபோது அவர் மன்றத் திற்கே வரவில்லை. ஆகவே அவருடைய தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது. ஜி.. 3722, நாள்: 21.11.1918) எல்லா பதவிகளையும் விழுங்கிப் புளிச்ச ஏப்பம் விட்ட பார்ப்பனர்கள், பசியுடன் கிடந்த பார்ப்பனரல்லாதாருக்கு சிறிதளவு கிடைப்பதற்கான ஆணையையும் எதிர்க்கும்நல்ல எண்ணம்கொண்டோர். பார்ப்பனருக்குப் பாதக மான ஆணை என்றனர். “எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலா? குறள்படிஅந்தணர்எனத் தகுதி பெற்றவர்களா? பார்ப்பனரே முழுவதும் நிரம்பியிருந்த சென்னை உயர்நீதி மன்றத்திடம் இருந்த மாவட்ட முன்சீஃப் பதவிகளுக்கான நியமன உரிமை பறிக்கப்பட்டது பார்ப்பனரின் கொடுங்கோன்மையால் தானே! (அன்று, ஒன்பது நீதிபதிகளில் ஆறு பேர் பார்ப்பனர், இருவர் இஸ்லாமியர், ஒரே ஒரு பார்ப்பனர் அல்லாதார் சி.சங்கரன் நாயர்) (ஜி.. 1129, நாள்: 8.9.1913) விவாதத்தில் பார்ப்பன உறுப்பினர் கே.சீனிவாச அய்யங்கார் தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் தகுதி படைத்தவர்களாக இருக்க வேண்டும் என்றார். பதிலளித்த நீதிக்கட்சி .தணிகாச்சலம் செட்டியார் அப்படியானால் நாங்கள் தகுதி இல்லாதவர்களா என்று மடக்கினார். அயர்லாந்துப் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக் கப்படுபவர்கள் கத்தோலிக்கர்கள் என்பதால் தகுதி குறைவானவர்களா எனக்  கேட்டார். கிரேட் பிரிட்டன் நாடு என்பது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து எனும் 3 நாடுகளைக் கொண்டது. இவற்றுள் அயர்லாந்து கத்தோ லிக்க நாடு. மற்றவை புரொஸ்டன்ட் நாடுகள் என்பதால் இக்கேள்வியைக் கேட்டார். சீனிவாச அய்யங்கார் திண றினார். இறுதியில் வருவாய் நிலை ஆணை எண் 128(2) கடைப்பிடிக்க படவேண்டும் என்றும் அம்மாதிரி செய்யப் படுகிறதா என்பது கண்காணிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் நீதிக்கட்சியின் ஆட்சி அமைக்கப்பட்டு இந்த ஆணை வருவாய்த்துறையில் மட்டுமல்லாமல் அரசின் அனைத்துத் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

நீதிக்கட்சியின் கொள்கைகளுக்கும் செயல்களுக்கும் எதிர்ப்பு காட்டியவர் உள்துறை அமைச்சராக இருந்த .ஆர்.நாப் என்பவர். அவர் மாற்றப்பட்டு சர்.லயோனல் டேவிற்சன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் நீதிக்கட்சி யின் கொள்கைகள், கோரிக்கைகளின் பால் பரிவுடன் அணுகிப் பரிகாரம் கண்டவர். இவர் காலத்தில்தான் இரண் டாவது கம்யூனல் ஜி.. பிறப்பிக்கப்பட்டது. அதன்படியே பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டது. இந்தியா முழுமைக்கும் செல்லத்தக்கபணியாளர் தேர்வு வாரியம்அமைக்கும் முயற்சி மேற்கொள்ளபட்டதானதை முறியடித் திடும் வகையில் மாகாண வாரியம் அமைந்தது. அவ்வாறு அமைக்கப்பட்ட மாகாண வாரியமாக - சென்னை மாகாணப் பணியாளர் வாரியம் - இந்தியாவிலேயே முதன் மையாக அமைந்தது. இதுதான் எம்.பி.எஸ்.சி. எனக்கூறப் படும் அமைப்பு ஆகும். 1929இல் அமைக்கப்பட்டது.

Comments