விடுதலை வளர்ச்சி நிதி

பெரியார் பெருந்தொண்டர் மு.வடிவேல் அவர்களின் 87வது பிறந்த நாளை (15.02.2021) முன்னிட்டு திருவையாறு ஒன்றியத்தின் சார்பில் அவருக்கு ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் துரை.ஸ்டாலின், ஒன்றிய துணை அமைப்பாளர் .கவுதமன், ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் .தமிழரசன், மண்டல மாணவர் கழக அமைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக 14.02.2021  அன்று மு.வடிவேல் அவர்களைச் சந்தித்த மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் பிறந்தநாளை முன்னிட்டு சால்வை அணிவித்து 90ஆவது பிறந்தநாளை வெகுசிறப்பாய் கொண்டாடுவோம் என்று அறிவித்தார். வருகை தந்தோருக்கு அவரது இரு மகன்கள் .செல்வகுமரன், கலைச்செல்வன் இரவு சிற்றுண்டி அளித்து சிறப்பித்தனர். விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ 200 அளித்து மகிழ்ந்தனர்.

Comments