வழக்குரைஞர் சி.அமர்சிங் பவள விழா மலர் வெளியிட்டு கழகத் துணைத் தலைவர் வாழ்த்து

தஞ்சாவூர், பிப். 11- தஞ்சாவூரில் 7.2.2021 அன்று காலை 10 மணி அள வில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள இராமசாமி திருமண மண்டபத்தில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர்களின் பவள விழா, 75ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது.

திராவிடர் கழக காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்கள் நிகழ்விற்கு தலைமை ஏற்று வாழ்த்துரையாற்றினார். திராவிடர் கழக பொதுச் செயலாளர், விழாக்குழு தலைவர் இரா.ஜெயக்குமார் வரவேற் புரையாற்றி நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.

காணொலி ஒளிபரப்பு

வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர் களின் திராவிடர் கழகம், ரோட்டரி சங்கம், கலைப்பணி, வழக்குரைஞர் பணிகளில் மற்றும் பொதுப்பணிகள், உலக சுற்றுலா குறித்த 13 நிமிடங்கள் அடங்கிய காணொலி ஒளிபரப்பப் பட்டது.

பவள விழா மலர் வெளியீடு

வழக்குரைஞர் சி.அமர்சிங் அவர் களின் பவள விழாவினை முன்னிட்டு விழாக்குழுவினரால் மலர் வெளியிடப்பட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வெளியிட்டார். மேடையில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வெளியிட்டார்கள். தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக் கம், முன்னாள் அமைச்சர் எஸ். என்.எம்.உபயதுல்லா, திமுக மாவட் டச் செயலாளர் துரை.சந்திரசேகரன், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மூத்த வழக் குரைஞர் தஞ்சை இராமமூர்த்தி, கழக காப்பாளர் இராஜகிரி கோ.தங்கராசு, திராவிடர் கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் பெற் றுக்கொண்டனர்.

இசை நிகழ்ச்சி

முன்னதாக காலை 9 மணி அள வில் உறந்தை கருங்குயில் கணேசன் அவர்களின் இசை நிகழ்ச்சி நடை பெற்றது. வழக்குரைஞர் சிங்காரவேல் அவர்களும் இணைந்து பாடல் பாடி னார். மாநில கலைத்துறை செய லாளர் .சித்தார்த்தன் தொகுத்து வழங்கினார்.

முன்னிலையேற்றோர்

திராவிடர் கழக மாநில அமைப் பாளர் இரா.குணசேகரன், மேனாள் .. தலைவர் இரா.இரத்தினகிரி, காப்பாளர் வே.ஜெயராமன், தஞ்சை மண்டல தலைவர் மு.அய்யனார், கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி .அன்பழகன் ஆகியோர் முன்னிலை ஏற்று வாழ்த்துரை ஆற்றினார்கள். மாநில .. தலைவர் மா.அழகிரிசாமி, மண்டல செயலாளர் கா.குருசாமி, மாநில கலைத்துறை செயலாளர் .சித்தார்த்தன், மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலை வர் பெ.வீரையன், குழந்தை மாவட்டத் தலைவர் கு.நிம்மதி, குடந்தை மாவட்ட செயலாளர் சு.துரைராசு, பட்டுக்கோட்டை மாவட்ட செய லாளர் வை.சிதம்பரம், மன்னார்குடி மாவட்ட செயலாளர் கோ.கணேசன், மாநில .. துணைத் தலைவர் கோபு.பழனிவேல், தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன் ஆகியோர் நிகழ்விற்கு முன்னிலையேற்றனர்.

அமர்சிங் - கலைச்செல்வி ஆகியோருக்கு சிறப்பு செய்தல்

பவள விழா நாயகர் வழக்குரைஞர் சி.அமர்சிங் - _ கலைச்செல்வி இணை யருக்கு கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சால்வை அணிவித்து சிறப்பு செய் தார். மண்டலத் தலைவர் வெ.ஜெய ராமன், ரோசாப்பூ மாலை அணி வித்து பாராட்டு தெரிவித்தார். மாநில வழக்குரைஞர் அணி சார்பில் கரூர் வழக்குரைஞர் மு..ராஜசேகரன், வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், குடந்தை நிம்மதி ஆகியோர் ஏலக் காய் மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.

தமிழர் தலைவர்

காணொலியில் வாழ்த்துரை

வழக்குரைஞர் சி.அமர்சிங் பவள விழா பாராட்டுரையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சென்னையிலிருந்து காணொலி மூல மாக ஆற்றினார். அமர்சிங் - கலைச் செல்வி வாழ்விணையர்களின் பன் முக ஆற்றல் இயக்கப் பணி, பொதுப் பணிகள் குறித்து 40 நிமிடங்கள் பல்வேறு செய்திகளை எடுத்துரைத்து ஆசிரியர் அவர்கள் பாராட்டுரையில் குறிப்பிட்டார்கள்.

அனைத்துக் கட்சியினர் பாராட்டுரை

முன்னாள் மத்திய அமைச்சர் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம்.உபயதுல்லா, தஞ்சை சட்டமன்ற உறுப்பினர், மாநகர திமுக செயலாளர் டி.கே.ஜி. நீலமேகம், தஞ்சை மூத்த வழக்குரைஞர் தஞ்சை .இராமமூர்த்தி, மதிமுக மாவட்ட செயலாளர் கோ.உதய குமார், திமுக மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, சிபிஅய் மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி. சிபிஅய்(எம்) மாவட்ட செயலாளர் கோ.நீலமேகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.ஜெயுணுலாவுதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் .சொக்கா ரவி, இந்திய ஜனநாயகக் கட்சி மாவட்ட தலைவர் .சிமியோன் சேவியர்ராஜ், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் அய்.எம்.பாதுஷா, திராவிட இயக்க தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் செல்ல.கலைவாணன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் எம்.பி.நாத்திகன், திமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி, அமர்சிங் அவர்களின் சகோதரர் குமாரவேலு, ஆசிரியர் திருஞானசம்பந்தம், மதிமுக நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றி னார்கள்.

இறுதியாக கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி.பூங்குன்றன் பாராட் டுரை - சிறப்புரையாற்றினார்கள். தஞ்சை மாவட்ட செயலாளர் .அருணகிரி நன்றி கூறினார். விழா நாயகர் வழக்குரைஞர் சி.அமர்சிங் ஏற்புரை ஆற்றி அனைவருக்கும் நன்றி கூறினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றிடவும் மாநிலம் மற்றும் உலகம் முழுவதும் உள்ளவர்கள் காணொலியில் இணைந்திடவும் ஜூம் ஆம் காணொலியை மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், பாரதிதேவா ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். மண்டல இளை ஞரணி செயலாளர் வே.இராஜவேல் நிகழ்வை முன்மொழிந்தார்.

தஞ்சை மாவட்டம், குடந்தை மாவட்டம், தஞ்சை வடக்கு தெற்கு ஒன்றியம், ஒரத்தநாடு ஒன்றியம், திருவையாறு ஒன்றியம் உள்ளிட் டோர் மலர்களை பெற்றுக் கொண் டனர்.

நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன் றிய, மண்டல, நகர கழகப் பொறுப் பாளர்கள், தோழர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், கலைத்துறையினர், வழக்குரைஞர்கள், நண்பர்கள், உறவி னர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். .பெரியார் செல்வன், .சாக்ரடீஸ், இந்துமதி, கலைமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் விழாவிற்கான ஏற்பாடுகளை கழகத் தோழர்களோடு இணைந்து செய்தி ருந்தனர்.

Comments