ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·  மேற்கு வங்கத்தில் பாஜகவின் ரத யாத்திரை மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாய அமைப்புகள் பிப்ரவரி 18 ஆம் தேதி நாடு முழுவதும் 4 மணி நேர ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·  முஸ்லிம்களை "வேற்றார்" என்று மாற்றிட நாட்டில் சிலர் ஒருங்கிணைந்து முயற்சி செய்வதாகவும், ஆனால், இந்தியாவின் பன்மை சமுதாயம் பல நூற்றாண்டுகளாக யதார்த்தமாக உள்ளது என்றும் முன்னாள்  குடியரசு துணைத் தலைவர் அமீத் அன்சாரி கூறியுள்ளார்.

தி டெலிகிராப்:

·  கருநாடகா விவசாய அமைப்புகள், டில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் பங்கேற்ற பின்னர், தற்போது  தென்னிந்தியா முழுவதும் உள்ள விவசாய சமூகத்தை ஊக்குவிப்பதற்காக கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் பங்கேற்கும் பேரணிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

·     மத்திய அரசின் 2021-22 நிதிநிலை அறிக்கை, சில அமைச்ச கங்களின் நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ளது. விவசாயிகளையும் நடுத்தர வர்க்கத்தையும் புறக்கணித்துள்ளது. இது உற்சாகமற்ற நிதிநிலை அறிக்கை. இது நடுத்தர வர்க்கத்தை அவர்களுக்கான தேவை நேரத்தில் புறக்கணித்து, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் வேளாண் துறைகளில் மோசமான ஒதுக்கீடு மூலம் மக்களை ஏமாற்றியுள்ளது என மக்களவையில்  காங்கிரஸ் உறுப்பினர் சசி  தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

- குடந்தை கருணா

11.2.2021

Comments