குடந்தை திருச்சேறை கிளைக் கழகம் சார்பில் திராவிடம் வெல்லும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்


குடந்தை
, பிப். 26- குடந்தை கழக மாவட்டம், திருவிடைமரு தூர் தெற்கு ஒன்றியம், திருச் சேறை கிளைக் கழகம் சார்பில்  திராவிடம் வெல்லும் தெரு முனை பிரச்சாரக் கூட்டம் 20-.02.-2021, சனிக்கிழமை, மாலை 6 மணியளவில் திருச் சேறை கடைவீதியில்  ஒன்றிய செயலாளர் (தெ.சங்கர் தலைமையில் ஒன்றிய தலை வர் எம்.என்.கணேசன், ஒன் றிய அமைப்பாளர் .சிவ குமார், ஒன்றிய செயலாளர் () .முருகானந்தம், ஒன்றிய து.செயலாளர் வே. குணசேக ரன் ஆகியோர் முன்னிலையில் எழுச்சி யுடன் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கழக பேச்சா ளர் தஞ்சை இராம.அன்பழ கன் சிறப்புரையாற்றினார். மேலும் மாவட்ட தலைவர் கு.நிம்மதி, பகுத்தறிவாளர் கழகம் தி.இராஜப்பா, பொதுக் குழு உறுப்பினர் சு.விஜய குமார், மாவட்ட  து.தலைவர் வே.கோவிந்தன், மாவட்ட மகளிரணி து.செயலாளர் மு.திரிபுரசுந்தரி, குடந்தை  பெருநகர தலைவர் கு.கவுத மன், பெருநகர செயலாளர் பீ.இரமேஷ், நாச்சியார் கோயில் து.தலைவர் வீ.மணி வண்ணன், பவுன்ட்ரீகபும் முருகேசன், மாவட்ட இளை ஞரணி தலைவர்/பொதுக் குழு உறுப்பினர் .சிவக் குமார், மாவட்ட வழக்குரை ஞரணி சா.சக்திவேல், இளை ஞரணி து.செயலாளர் வலங்கை பெரியார் தினேஷ், நாச்சியார் கோயில் சுதன்ராஜ் ஆகியோர் கலந்து கொண் டனர்.

நிகழ்ச்சியில் இயக்கத்தில்  இணைய விரும்பிய இளைஞர் செம்பியவரம்பல் தோழர் கண்ணதாசன் என்பவரை  கழக பேச்சாளர் இராம.அன் பழகன் வரவேற்று பயனாடை அணிவித்து சிறப்பித்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந் தோரை திருச்சேறை கிளைக் கழக பொறுப்பாளர்கள் ஜெ. அன்பழகன் வரவேற்றும் சி.வரதராஜன் நன்றி கூறியும் உரையாற்றினர்.

Comments