ஆசிரியருக்குக் கடிதம் - “பகுத்தறிவு இல்லாத படிப்பு பாழ்”

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

சமீபத்தில் ஆந்திராவில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரு கல்லூரி ஆசிரியரும், அவர் மனைவியும் சோதிடக்காரனின் மூடத்தன மான சோசியத்தை கேட்டு தங்களுடைய இரண்டு பெண்களை கொலை செய்தது மிகவும் கொடூரமானது, கண்டிக்கத்தக்கது.

நான் ஆசிரியர் என்ற அனுபவத்தில் - என்னுடன் பணிபுரிந்த பல ஆசிரியர்களி டமும் இந்த சோதிடம் என்ற மூடப்பழக்கம் இருந்தது.

பல ஆசிரியர்கள் தங்கள் பெயர்களுக்கு பின்னால் ஒரு அடி நீளத்தில் தாங்கள் வாங் கிய பட்டங்களைப் போட்டுக் கொள்வார்கள். ஆனால் ஏதாவது எழுதும்போது பிள்ளை யார் சுழி இன்றி எழுத மாட்டார்கள். அன்றா டம் செய்தித்தாள்களில் வரும் சோதிடம் தான் முதலில் பார்ப்பார்கள். பல பட்டங்கள் பெற்றும் இவர்களுக்கு பகுத்தறிவு இல் லையே? என்ற கவலை எனக்கு மிகவும் உண்டு.

என்னுடன் பணிபுரிந்த கிறிஸ்தவ மதத் தைச் சேர்ந்த ஒரு பெண் ஆசிரியர் தன்னு டைய மகனுக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் மருத்துவரிடம் அழைத்துப்போக வலியுறுத்தியும், அவர் மறுத்துவிட்டார். தனது மதத்தின் கோட்பாடுகளின்படி மருத்து வரிடம் சிகிச்சை பெற்றால் இயேசுவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று விவா தித்தார். இயேசு நாமத்தை ஜெபித்தால் நோய் தீர்ந்துவிடும் என்றார்.

இறுதியில் நோய் முற்றி மகன் காலமானார். அப்போதும் அவ்வாசிரியர், “மகன் யேசுவின் பாதத்தை அடைந்தார்என்று தான் கூறினார்.

யேசுவின் மீதுள்ள நம்பிக்கையால் மருத்துவரை அணுகவில்லை. மேலும் பல ஆசிரியர்கள் சோதிடம் பார்ப்பதைப் பகுதி நேரத் தொழிலாகவும் செய்கிறார்கள்.

என்னுடன் பணிபுரிந்த ஒரு ஆசிரியர் சோதிடத்தில் நிபுணர் என்று சக ஆசிரியர்கள் கூறியதைக் கேட்டு, நான் அவரை சோதிக்க நினைத்தேன். எங்கள் வீட்டில் நாய் ஒன்று இரண்டு குட்டிகளை போட்டது. நாய்க்குட்டி பிறந்த நாள், நேரத்தை குறித்துக்கொண்டு அந்த சோசியரிடம் சென்று ராசிபலன் கணிக் கச் சொன்னேன். அவரும் அந்த ராசியில் பிறந்தவர் நீண்ட நாட்கள் வாழ்வார். நல்ல புகழின் உச்சத்திற்கு செல்வார் என்றார். சில தினங்களில் அந்த நாய்க்குட்டி காரில் அடிபட்டு இறந்தது.

பிறகு அந்த ஆசிரியரிடம் கேட்டேன், "நாய் என்று தெரியாமல் சோதிடம் பார்ப்பது எவ்வளவு மூடத்தனம். மற்றவர்களை ஏமாற் றுவது, பொய் சொல்வது இதுதான் உங்கள் சோதிடமா?" என்றேன். அன்றிலிருந்து அவர் என்னிடம் பேசுவது இல்லை.

படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது உண்மையானது. படிக்காத வனை விட படித்தவர்களிடம் தான் அதீத மூடநம்பிக்கை உள்ளது. மிகவும் படித்த அய்..எஸ்., உயர்நீதிமன்ற நீதிபதிககள் அனைவரும் பார்ப்பான் கொடுக்கும் பஞ்சகவ்யம் (மாட்டு மூத்திரம்) வாங்கிக் குடிக்கின்றனர். இவர்கள் உயர்ந்த பதவியிலிருந்தும் பகுத்தறிவு இல்லையே!

இறுதியாகக் கூறுவது படிக்காதவனை திருத்தலாம், ஆனால் படித்த தற்குறிகளை திருத்துவது கடினம். உங்கள் கூற்றுப்படிபகுத்தறிவு இல்லாத படிப்பு பாழ்

- கோ.நாத்திகன், கரசங்கால்

Comments